குளத்தின் நடுவில் மிதவை ஒன்றில் நடாத்தப்பட்ட கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் முற்றுகை..
கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள கு ளத்திற்குள் மிதவையில் வைத்து நடாத்தப்பட்ட கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தி னை பொலிஸாா் முற்றுகையிட்டுள்ளனா்.
இதன்போது குளத்தின் நடுவில் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் மிதவை ஒன்றில் பாதுகாக்க ப்பட்ட ஒரு பரல் கோடா, 42 போத்தல் கசிப்பு ஆகியவற்றை பொலிஸாா் மீட்டிருக்கின்றாா்க ள். காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து
கிளிநொச்சி மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சர் ஜெயந்த ரத்நாயக்கவின் வழிகாட்டலில் கிளிநொச்சி மாவட்ட விசேட போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் காவல்துறையின அதிகாரி சத்துரங்க தலைமையிலான காவல்துறையினர் உத்தியோகத்தர்கள் இதனை மீட்டுள்ளனர்.
வாழ்வாதாரகத்திற்கு வழங்கப்பட்ட மீன் பிடிக்க பயன்படும் மிதவை ஒன்றை பயன்படுத்தி குளத்தின் நடுவில் மறைப்பு ஒன்றுக்குள் இச் சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வந்துள்ள நிலையில் குளத்திற்குள் நீந்திச் சென்று காவல்துறையினர் இவற்றை மீட்டுள்ளனர்.
அத்தோடு கிளிநொச்சி உதயநகர் மற்றும் கனகபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 வேப்பம் குற்றிகளையும் 02 முதிரை குற்றிகளையும் கைப்பற்றியுள்ள காவல்துறையினர் சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளனர்.