மணிக்கு 120 கிலோ மீற்றா் வேகத்தில் பயணிக்கும் ரயில் வருகிறது, கொழும்பு- யாழ்ப்பாணம் இடையில் 5 மணித்தியாலங்களில் பயணிக்கலாம்..

ஆசிரியர் - Editor I
மணிக்கு 120 கிலோ மீற்றா் வேகத்தில் பயணிக்கும் ரயில் வருகிறது, கொழும்பு- யாழ்ப்பாணம் இடையில் 5 மணித்தியாலங்களில் பயணிக்கலாம்..

கொழும்பு- யாழ்ப்பாணம் இடையில் 5 மணித்தியாலங்களில் பயணம் செய்யகூடிய ரயில் சே வை ஆரம்பிக்கவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. 

5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையில் ரயில் சேவையை முன்னெடு க்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேரத்தை மீதப்படுத்தவே பயணிகள் எதிர்பார்க்கின்றனர். அதனை நிறைவேற்றும் வகையில் புதிய ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் காலங்களில் ரயில் வீதி ஒன்று அமைத்து சிறந்த போக்குவரத்து சேவை ஒன்றை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் முடிவாக பொல்கஹவெல ரயில் நிலையத்தில் இருந்து குருணாகல் ரயில் நிலையத்திற் கும், குருணகால் ரயில் நிலையத்தில் இருந்து மஹவ ரயில் நிலையம் வரையிலும் 

விரைவில் இரண்டு ரயில் வீதியாக மாற்றவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பின்னர் மஹவ ரயில் நிலையத்தில் இருந்து ஓமந்தை ரயில் நிலையம் வரையில் 

ரயில் வீதி ஒன்றை அமைத்து, மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு