கிளிநொச்சி பொதுச்சந்தை கட்டிடம் அமைப்பதில் இழுபறி, மேலும் கலாதாமதம் ஆகலாம்..
கிளிநொச்சி மாவட்டத்திற்கான பொதுச் சந்தை கட்டிடம் ஒன்றை அமைப்பதில் தொடா்ச்சியா க இழுபறி நிலை தொடா்வதால் கட்டிடம் அமைவதற்கு மேலும் காலதாமதம் உண்டாகும் என கூறப்படுகின்றது.
கட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டாலேயே இந்த நிலை என்றும் தெரிவிக்கப்படு கின்றது. கிளி நொச்சி மாவட்டத்தின் பொதுச் சந்தையின் நிரந்தரக் கட்டடத்துக்கு முதலில் 150 மில்லியன் ரூபா வுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.
பின்னர் அது 767 மில்லியன் ரூபா நிதிச் செலவுடனான புதிய திட்டமாக மாற்றப்பட்டி ருந்தது. சந்தைக்கான நவீன புதிய திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையினர் மேற் கொண்டிருந்தனர். வரையப்பட்ட புதிய திட்டம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பில் அமைச்சரவை நகர அபிவிருத்தி அதிகார சபையினரிடம் விளக்கம் கோரியது. இதற்கான விளக்கம் நகர அபிவிருத்தி அதிகார சபையால் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டு அமைச்சரவை அதனை ஏற்றுக்கொண்டாலே
வரவு – செலவு திட்டத்தினூடாக நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் வந்த தலைமை அமைச்சர் முன்னிலையில் இது தொடர்பான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றிருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் மேற்படி விளக்கம் அளிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபையினர் 767 மில்லியனுக்கான விளக்கத்தை அமைச்சரவைக்கு அனுப்பி வைத்து அதனை அமைச்ச ரவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்து வருகின்ற வரவு -– செலவுத் திட்டத்தில்
நிதி ஒதுக் கீடு மேற்கொள்ளப்படும். அத்துடன் ஒரே வரவு–செலவு திட்டத்தில் முழுத் தொகையும் ஒதுக்கப்படாது. கிளிநொச்சி பொதுச் சந்தைக்கான நிரந்தரக் கட்டடம் என்பது இப்போதைக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகிறது என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.