நினைவேந்தல்கள் செய்யமாட்டோம், எம்மை அச்சுறுத்துகிறாா்கள் என கூறியவா்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முண்டியடிப்பு..

ஆசிரியர் - Editor I
நினைவேந்தல்கள் செய்யமாட்டோம், எம்மை அச்சுறுத்துகிறாா்கள் என கூறியவா்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முண்டியடிப்பு..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்காகவே தாம் சில முயற்சிகளை மேற் கொண்டுள்ளதாகவும், மாறாக நினைவேந்தலை குழப்பும் முயற்சிகள் எதனையும் தாம் செய்யவில்லை. எனவும் புனா்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் புலிகள் கட்சியின் தலைவா் இன்பராசா ஊடக ங்களுக்கு கூறியிருக்கின்றாா். 

உரிமைக்காக போராடிய தமக்கே பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான நிகழ்வுகளை நடத்தும் உரிமை உண்டு என்றும், எனினும் மக்கள் இந்நிகழ்வை முன்னின்று நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமது குழுவினர் செய்துகொடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்காக  

கடந்த 18ஆம் திகதி தமிழர் மரவுரிமை பேரவை, முள்ளிவாய்க்கால் கிராம அபிவிருத்தி சங்கம், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து குழு ஒன்றினை அமைப்பதற்கான கூட்டத்தினை நடத்தின. குறித்த கூட்டத்தில், இந்த பொதுக்குழுவே இனிவரும் காலங்களில் எந்தவிதமான 

குழப்பங்களும் இல்லாத வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தும் என்று ஏகமன தாக தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில்  முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்ற புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராஜ் உள்ளிட்டவர்கள் அங்குள்ள மக்களை அழைத்து இவ்வருடத்திற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 

நிகழ்வுகளை தாம் செய்யவுள்ளதாகவும் அதற்கு  பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பாக, எமது செய்திச் சேவை இன்பராசாவை தொடர்புகொண்டது. அதன்போதே, இன்பராசா மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.

கடந்த வருடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட சில குழுவினர் இணைந்து மேற்கொண்டபோது சிக்கல்கள் ஏற்பட்டதாக இன்பராசா தெரிவித்தார். நினைவேந்தல் நிகழ்வுகள் அரசியல் சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆனால், தமது குழுவினர் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடவில்லையென்றும், பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் பகுதிக்கு மீண்டும் சென்று குறித்த குழு தொடர்பாக தீர்மானிக்கவுள்ளதாகவும் இன்பராசா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு