நாங்கள் போா்க்குற்றங்களை செய்யவில்லை, முண்டியடிக்கும் முன்னாள் இராணுவ தளபதிகள்..

ஆசிரியர் - Editor I
நாங்கள் போா்க்குற்றங்களை செய்யவில்லை, முண்டியடிக்கும் முன்னாள் இராணுவ தளபதிகள்..

இலங்கை இராணுவம் போா்க்குற்றங்களை செய்தது. என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க பகிர ங்கமாக கூறியிருக்கும் நிலையில், அவ்வாறு ஒண்டும் நடக்கவில்லை. என முன்னாள் இராணு வ  தளபதிகள், கடற்படை தளபதிகள், விமான்படை தளபதிகள் முண்யடித்துக் கொண்டு கூற தொடங்கியிருக்கின்றாா்கள். 

குறிப்பாக நேற்றய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில், முன்னாள் வி மானப்படை தளபதி எயா் சீப் மாா்ஷல் றொஷான் குணத்திலக்க, மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்நாயக்க ஆகியோா் கலந்து கொண்டு போா்க்குற்றங்கள் எவையும் நடக்கவில் லை என கூறியிருக்கின்றாா்கள். 

எயா் சீப் மாா்ஷல் றொஷான் குணத்திலக்க..

போர் முடிவடைந்தப் பின்னர், புலி உறுப்பினர்கள் மறுவாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப் பட்டனர். இந்தத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு புலி உறுப்பினர்கள் ம ன்னிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ள, இத்தகைய செயற்பாடுகளை தமிழர் தரப்பு வரவேற்க வேண்டும்.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சிங்கள மக்கள் என்ற வகையில் எமது கடமையை சரி வரசெய்துள்ளோம். ஆகவே, நல்லிணக்கம் என்ற இலக்கு வெற்றியடைய வேண்டுமென்றால், த மிழர் தரப்பு கூடுதல் பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும். போர்காலத்தில் எனது தம்பி, தீவி ரவாதிகளால் கொல்லப்பட்டார். 

அதற்காக நான் தமிழ் மக்களுடன் முரண்படவில்லை. எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இரு க்கின்றனர் என்றார்.

ஜெனரல் தயா ரத்நாயக்க..

கடந்த மூன்று, நான்கு வரு­டங்­க­ளில் எமது முப்­ப­டை­யின் அதி­கா­ரி­கள், மற்­றும் சிப்­பாய்­கள் பல்­ வேறு சந்­தர்ப்­பங்­க­ளில் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளின் கீழ் கைது செய்­யப்­ப­டும் நில­மை­கள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. இரண்டு இரா­ணு­வச் சிப்­பாய்­க­ளுக்கு சாவுத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 

கடற்­படை மற்­றும் இரா­ணு­வத்­தி­னைச் சேர்ந்த ஐவ­ருக்­கும் தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. ஊட­கங்­க­ளின் அண்­மைய தக­வல்­க­ளின் பிர­கா­ரம், முன்­னாள் கடற்­ப­டைத்­த­ள­பதி வசந்த கர­ ணா­கொ­டவை கைது செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்று தக­வல்­ கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

கடற்­ப­டைத்­த­ள­பதி கர­ணா­கொட என்­ப­வர் உல­கின் முக்­கி­ய­மான பயங்­க­ர­வாத இய­கத்­தினை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட்­ட­வர். பல­ரால் முடி­யாது என்று கைவி­டப்­ பட்ட விட­யத்­தினை கையி­லெ­டுத்து கடற்­ப­டைக்கு தலை­மை­தாங்கி பயங்­க­ர­வா­தத்­தினை ஒழித்து இந்த நாட்­டில் அமைதி 

நிலை­நாட்­டப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக இருந்­த­வ­ரா­கின்­றார். முன்­னாள் இரா­ணு­வப்­ப­டை­யின் பிர­தா­னியை கைது செய்­கின்­ற­னர். முப்­ப­டை­க­ளின் தலை­மையை கைது செய்­ய­வ­தற்கு முயற்­ சிக்­கின்­றார்­கள். இவ்­வாh­றன நிலை­மை­கள் மேலும் தொடர்­வ­தற்கு இட­ம­ளிக்­காது அரச தலை­ வர் உட­ன­டி­யாக தலை­யீ­டு­செய்து பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண­வேண்­டும்.

போர்க் குற்­றங்­கள் தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் கூறு­வது தொடர்­பில் நாம் தெளி­வான விட­யங்­களை கூற­வேண்­டி­யுள்­ளது. போர் நிறை­வுக்கு வந்த காலம் முதல் குறு­கிய அர­சி­யல் இலா­பத்­திற்­காக அவர் உள்­ளிட்­ட­வர்­கள் முப்­ப­டை­யின் அதி­கா­ரி­கள் மற்­றும் சிப்­பாய்­ க­ளுக்கு எதி­ராக இவ்­வா­றான 

குற்­ற­சாட்­டுக்­களை அடுக்­கிக்­கொண்டு வரு­கின்­றார்­கள். போர்க் குற்­றம் என்­பது சாதா­ர­ண­ மாக ஒரு சிப்­பாய் செய்­கின்ற விட­யம் அல்ல. குழு­வாக முன்­னெ­டுக்­கப்­ப­டும் விட­ய­மொன்­றா­ கும் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள வேண்­டும். அவ்­வா­றான எந்­த­வொரு சம்­ப­வங்­க­ளும் நடை­பெ­ற­ வில்லை. அவ்­வா­றா­ன­வற்றை நாம் காண­வு­மில்லை. 

இவ்­வா­றான நிலை­யில் போர்க் குற்­றம் நிகழ்ந்­தது என்­பதை ஏற்க இய­லாது. அது பொய்ப் பரப்­ புரை என்­றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு