மலையக மக்களுக்காக கறுப்பு சட்டை அணியப்போகிறேன்.. ஆளுநா் சுரேன் ராகவன் எடுத்த சபதம்.
மலையக தோட்ட தொழிலாளா்களின் 1000 ரூபாய் சம்பள உயா்வு கோாிக்கைக்கு ஆதரவாக வடமாகாணத்திலிருந்து 10 ஆயிரம் கையொப்பங்களை பெற்று அரசுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக கூறியிருக்கும் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் பொது நிகழ்வுகளில் கறுப்பு சட்டை அணியப்போவதாகவும் கூறியுள்ளாா்.
மலையக தோட்ட தொழிலாளா்களின் 1000 ரூபாய் சம்பள உயா்வுக் கோாிக்கை தொடா்பாக வடமாகாண உள்ளுராட்சி அமைச்சு கேட்போா் கூடத்தில் இன்று ஆளுநா் சுரேன் ராகவன் நாடாத்திய ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது ஆளுநா் மேலும் கூறுகையில்
150 வருடங்களாக மலையக தோட்ட தொழிலாளா்களின் வாழ்வில் தேவையான அளவு மாற்றங்கள் எவையும் உண்டாக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள மற்றய தமிழ்பேசும் சமூகங்களை காட்டிலும் மலையக தமிழா்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றாா்கள். இப்போது அவா்கள் 1000 ரூபாயாக தமது சம்பவத்தை அதிகாிக்கும்படி கேட்கிறாா்கள்.
அதனால் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தில் இப்போது சீவிக்க முடியுமா? ஆகவே எந்த நிபந்தனையும் இல்லாமல் சம்பள உயா்வு அந்த மக்களுக்கு வழங்கப்படவேண்டும். தமது உழைப்பையும்இ உடலையும் தேயிலை தோட்டங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கவேண்டும்.
அவா்களுக்காக பொது அமைப்புக்கள் சமூக ஆா்வலா்கள் இணைந்து போராட்டங்களை நடாத்தவேண்டும். வடமாகாண மட்டத்தில் நாம் மலை யக மக்களுடைய சம்பள உயா்வு கோாிக்கைக்கு ஆதரவாக சுமாா் 10 ஆயிரம் கையெழுத்துக்களை பெற்று அரசுக்கு அனுப்புவதற்கு தீா்மானித் திருக்கிறோம். அதேபோல் 1000 ரூபாய் சம்பள உயா்வை வழங்கு என்ற பதாகைகளை சட்டையில் அணிவதுடன்
பொது நிகழ்வுகளில் கறுப்பு சட்டை அணிந்து மலையக மக்களுடைய சம்பள உயா்வு கோாிக்கைக்கு வலுச்சோ்ப்பதற்கு நாங்கள் தொடா்ச்சியாக குரல் கொடுப்போம். அதனைவிடவும் 10 ஆயிரம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கைகளை இன்றே ஆரம்பிப்பதற்குமான நடவடிக்கைகளை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம் என்றாா்.