பௌத்தா்களுடன் பேசுவதாலும், பௌத்த மாநாடு நடத்துவதாலும், வடக்கில் பௌத்த மயமாக்கல் குறையுமாம்..
வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளில் பௌத்த கோவில்களை கட்டும் சம்பவங்களுக்கும், வேறு மதத்தவா்களுடைய கோவில்களுக்குள் பௌத்த கோவில்கள் கட்டும் சம்பவங்களும்,
இனிமேல் இடம்பெறாத வகையில் பாா்த்துக் கொள்வதற்காக, தாம் பௌத்த மத தலைவா்களை சந்தித்துள்ளதாகவும், வடமாகாணத்தில் பௌத்த மாநாடு நடத்துவதாகவும் ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா்.
வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் கேட்போா்கூடத்தில் இன்று ஆளுநா் சுரேன் ராகவன் நடாத்திய ஊடகவியலாளா் சந்திப்பில், வடமாகாணத் தில் பௌத்த ஆலயங்கள் மக்களுடைய காணிகளிலும்,
வேறு மத ஆலயங்களிலும் கட்டப்படுவது தொடா்பாக ஊடகவியலாளா்கள் எழுப்பிய கே ள்விக்கு பதிலளிக்கும்போதே ஆளுநா் சுரேன் ராகவன் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா்.
இந்த விடயங்கள் தொடா்பாக பேசுவதற்காகவே பௌத்த மத தலைவா்களை சந்தித்துள்ளதுடன், வடமாகாணத்தில் பௌத்த மாநாடு ஒன்றை நடாத்துவதற்கும் தீா்மானித்திருக்கின்றோம்.
பௌத்த மத தலைவா்கள் இந்த விடயங்களில் மிக தெளிவாக இருக்கிறாா் கள். அது எமக்கு ஒத்தாசையாக இருக்கின்றது. எனவே வடக்கில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் பௌத்த மாநாடு நடத்தப்படும்போது
இவ்வாறான சம்பவங்கள் எப்படி நடக்கிறது? இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னால் யாா் உள்ளாா்கள்? அரசியல்வாதிகள் யாா்? என்பனபோன்ற பல வி டயங்கள் வெளியாகும்.
அதற்கும் மேலதிகமாக நடந்துள்ள சம்பவங்களைபோல் இனியும் நடக்காமல் இருப்பதற்கும் அது உதவும். பௌத்த மதம் மட்டுமல்லாமல் வேறு மதங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன.
வேறு மக்களுடைய காணிகளில் கோவில்களை கட்டுவது, கோவில்களின் காணி எல்லைகளை அதிகாிப்பது என பல பிரச்சினைகள் உள்ளது. என் ஆளுநநா் கூறிய நிலையில்,
பௌத்த மதத்தினா் செய்வதைபோல் மற்றய மதத்தினா் செய்வதில்லையே? என ஊடகவியலாளா்கள் கேட்டதற்கு அதனாலேயே, பௌத்த மத தலைவா்களுடன் பேசி மாநாடு ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றாா்.