பலாலி விமான நிலையம் 3500 அடி நீளமான விமான ஓடு தளத்துடன் பிரமாண்டமாக மாறுகிறது..
பலாலி விமான நிலையத்தில் ஏ-320, ஏ-321 விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3ஆயிரத்து 500 மீற்றராக விரிவாக்கப்படும். இதன்மூ லம், இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு
மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 7 ஆயிரத்து 200 கி.மீ சுற்றுவட்டத்துக்குள் இருக்கும் நாடுகளுக்கான நேரடி வானூர்திச் சேவைகளை இங்கிருந்த நடத்த முடியும். பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலியில் நடந்த கூட்டத்தில்
இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் வானூர்திப் போக்குவரத்து அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓடுபாதை அபிவிருத்தியை முன்னுரிமை கொடுத்து முதற்கட்ட மாக மேற்கொள்ளுமாறு தலைமை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அருகில் உள்ள கட்டடங்களை தற்காலிகமாக புறப்படுகை மற்றும் வருகை முனையங்களாகப் பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறான நடைமுறை பல நாடுகளில் பயன்படுத்தப்படுவதாக வும் அவர் கூறியுள்ளார்.
நிரந்தர முனைய கட்டடங்களை இரண்டாவது கட்ட அபிவிருத்திப் பணியின் போது கட்ட முடி யும் என்றும், முதலில் வானூர்தி நிலையம் கணிசமான வானூர்திப் போக்குவரத்தை ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வானூர்தி நிலையத்துக்கான மின்சாரம், குடிநீர் வசதிகள், வீதி, எரிபொருள் களஞ்சியப்படுத்த ல் வசதிகள் தொடர்பாகவும் நீண்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வானூர்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம்,
வடக்கிலுள்ள மக்களுக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கும் என்றும், வணிக மற்றும் தொழில் வாய்ப்புகள் கிட்டும் என்றும், சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும் என்றும் சிவில் வானூர் திப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.