25ம் திகதி வடக்கு மாகாணத்தில் ஹா்த்தால் அனுட்டியுங்கள், நீதிக்கான குரலை சா்வதேசத்திற்கு காட்டுங்கள்..
காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு நீதி கேட்டு எதிா்வரும் 25ம் திகதி வடகிழக்கு காணாமல் ஆ க்கப்பட்டவா்களின் உறவினா்கள் பாாிய மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ள நிலையில், அன்றைய தினம் பூரண ஹா்த்தால் அனுட்டித்து நீதிக்கான குரலை உலகத்திற்கு காட்டுங்கள் எ ன காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கேட்டுள்ளனா்.
கதவடைப்புக்கு அழைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதியன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அன்றையதினம் காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதத்தலைவர்கள், அரசியற்கட்சிகளின் பிரதிநிதிகள், நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், மாணவர்கள்,
மக்கள் என அனைவரையும் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டு கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதிகிடைக்க ஐக்கிய நாடுகள் சபையைக் கோரவேண்டும் என்று உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்படவர்களுடைய உறவினர்கள் தனியே நீதி கேட்கவில்லை, அனைத்து மக்களுடைய எதிர்பார்ப்பும், அவாவும் அதுவே என்பதை ஐக்கிய நாடுகள் சபைக்குத் தெரியப்படுத்துவதற்காக அன்று வடக்கு மாகாணம் முழுவதும் கதடைப்பை மேற்கொண்டு,
போராடும் மக்களுக்கு ஆதரவு நல்குமாறும் உறவுகள் கோரியுள்ளனர்.
பேரணி
நீதி கோரிய ஆர்ப்பாட்டப் பேரணியாளது கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்தில் ஆரம்பித்து ஏ – 9 வீதி ஊடாக நகர்ந்து டிப்போசந்தியை அடைந்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் வரை செல்லும் என்றும்,
அங்கு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதிகளிடம் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் தெரிவித்தனர்.
எமது உறவுகள், பிள்ளைகளுக்கு நீதிகோரி இடம்பெறும் இந்தப் போராட்டடத்துக்கு முழுமையான உணர்வுபூர்வமான பங்களிப்பினை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரியுள்ளது.