SuperTopAds

கிளி.திருவையாறு இராணுவ முகாம் கழுதைகளால் மக்களுக்கு தொல்லை..

ஆசிரியர் - Editor I
கிளி.திருவையாறு இராணுவ முகாம் கழுதைகளால் மக்களுக்கு தொல்லை..

கிளிநொச்சி- திருவையாறு பகுதியில் இராணுவம் வளா்க்கும் கழுதைகள் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதுடன், வீதிகளில் கட்டாக்காலிகளாக திாிவதாக மக்கள் கூறுகின்றனா். 

அத­னால் கிராம மக்­கள் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. கிளி­நொச்சி மாவட்­டத்­தில் தற்­போது மேய்ச்­சல் தரை இல்­லாத நில­மையே காணப்­ப­டு­கின்­றது.

மேய்ச்­சல் தரை இன்­மை­யால் கால்­நடை வளர்க்­கும் மக்­கள் பெரும் சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யி­லே யே தமது கால்­ந­டை­களை வளர்க்­கின்­ற­னர். 

இந்­த­நி­லை­யில் இரா­ணு­வத்­தி­னர் பிற மாவட்­டங்­க­ளில் இருந்து 20 கழு­தை­க­ளைக் கொண்டு வந்­ துள்­ள­னர். அது­மட்­டு­மன்றி அவற்றை கிரா­மத் துக்­குள் கட்­டாக்­கா­லி­க­ளாக 

மேய்ச்­ச­லுக்கு விட்­டுள்­ள­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு ­கின்­றது. அவை குடி­ம­னை­க­ளுக்­குள் நட­ மா­டு­வ­தால் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது 

என்­றும் கிராம மக்­கள் விச­னம் தெரி­வித்­துள்­ள­னர்.