பிரதமாின் செயலாளருடன் தொலைபேசியை திருடியவா் மாட்டினாா், தொலைபேசியை மீட்டது பொலிஸ்..
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளருடைய தொலைபேசியை திருடிய நபா் அடையாளம் காணப்பட்டு, தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதாக தொிய வருகின்றது.
வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை யாழ்.வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அன்றைய தினம் யாழ்.போதான வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட அவசர சிகிச்சைக் கூட்டத்தை திறந்து வைத்திருந்தார்.
பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சு அதிகாரிகள் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் வைத்தியசாலையின் பாதுகாப்பு பெருமளவில் பலப்படுத்தப்பட்டு விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் என அங்கு பலரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அதியுச்ச பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுருந்த நிலையில் அதுவும் பிரதமர் கலந்து கொண்டிருந்த அந்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதமரின் செயலக பெண் அதிகாரி ஒருவரின் தொலைபேசி இதன் போது திருடப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டிருந்ததால் கூட்டத்தோடு கூட்டமாக நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு உள்நுழைந்த திருடனொருவர் அங்கு நின்றுருந்த அப் பெண்ணின் கைப்பையில் இருந்து தொலைபேசியை திருடிச் செல்வது போன்ற காட்சிகள்
வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வீ கமராவில் பதிவாகியுள்ளது இதற்கமைய வைத்திய சாலையில் பொருத்தப்பட்டிருந்த கமராவின் பதிவுகளைக் பார்வையிட்ட போது அங்கு நின்றிருந்த இளைஞரொருவர் திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
அந்த கமரா பதிவுகள் தற்போது வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிஸார்
குறித்த பெண்ணின் திருடப்பட்ட கைத்தொலைபேசியையும் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.