பலாலி விமான நிலையத்தை விற்பனை செய்ய முயற்சியா? அரசு மீது எழுத்த பாாிய குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
பலாலி விமான நிலையத்தை விற்பனை செய்ய முயற்சியா? அரசு மீது எழுத்த பாாிய குற்றச்சாட்டு..

இலங்கை அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு முயற் சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் ரஞ்சித் டீ சொய்ஷா கூறியுள்ளாா். 

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது பலாலி விமான நிலையம் சம்பந்தமாக வெளியிட்ட கருத்து இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் 

அவர் கூறியுள்ளார். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய உள்ளதாகவும் இதன் மூலம் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியை சேர்ந்த மக்கள் 

தென்னிந்தியாவுக்கு பயணங்களை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என அமைச்சர் ரணதுங்க தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வர அதிக நேரம் எடுக்கும் என்பதால், பலாலி விமான நிலை யத்தை அபிவிருத்தி செய்வது அவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள ரஞ்சித் சொய்சா,

அமைச்சரின் கருத்தை ஆழமாக ஆராய்ந்தால், அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை புரிந்துக் கொள்ளலாம். பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் 

முயற்சித்து வருகிறது. இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு