SuperTopAds

முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 202 அரச ஊழியா்கள் இல்லை, என்ன செய்யபோகிறாா் பிரதமா்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 202 அரச ஊழியா்கள் இல்லை, என்ன செய்யபோகிறாா் பிரதமா்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் 202 அரச ஊழியா்கள் வெற்றிடங்கள் நிலவுவதாக பிரதமாின் கவனத் திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. 

மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

அதில் மாவட்டச்செயலரால், வட்டத்தின் வெற்றிடங்கள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டது. மாவ ட்டத்தில் 1 பிரதேச செயலாளர், 2 உதவிப் பிரதேச செயலாளர், 

7 திட்டமிடல் பணிப்பாளர்கள் 2 கணக்காளர்கள், 71 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், 8 தொழி நுட்ப உத்தியோகத்தர்கள், 66 பொது முகாமைத்துவ உதவியாளர்கள்,

23 கிராம அலுவலர்கள், 6 சாரதிகள், 24 அலுவலக பணியாளர்கள் உள்ளடங்கலாக 202 வெற்றி டங்கள் இருப்பதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் 

எடுத்துக் கூறினார். இதனைக் கேட்டறிந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை 

வழங்குமாறு பணித்தார்.