கூழாமுறிப்பு தமிழ் கிராமத்தில் முஸ்லிம் மக்களுக்கு காணி பிடித்துக் கொடுக்க பாடுபடும், முல்லைத்தீவு அரச அதிபரும், அமைச்சா் றிஷாட்டும்..
முல்லைத்தீவில் இடம்பெறும் அபிவிருத்தியினை விடவும் மாவட்டத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப் பே அதிகமாகவுள்ளது. மகாவலி எனவும் தொல்லியல் திணைக்களம் எனவும் உள்ளவை மகா வலியாகவும் தொல்லைத் திணைக்களமாகவுமே உள்ளது.
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராசா தெரிவி த்தார். வடக்கிற்கு 3 நாள் பயணமாக வடக்கிற்கு வருகை தந்த பிரதமர் ரணுல் விக்ரமசிங்க நேற்றைய தினம் முல்லைத்தீவிற்கு பயணித்த நிலையில்
மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபுவிருந்தி தொடர்பான கூட்டத்தின்போதே மேற்படி விடயத்தினை சுட்டிக்காட்டினார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,
இவ்வாறு மாவட்டத்தில் சில அபிவிருத்தி என்ற நிலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்த வண்ணமும் மிகைப்படுத்தப்பட்ட வரலாற்றுத் திணிப்பும் இடம்பெறுவது தொடர்பில் கரிசனை செலுத்தியே ஆக வேண்டும். இதற்கு சட்ட ரீதியில் அன்றி நாடாளுமன்றத் தீர்வுக் குழுவின் ஊடாக
ஒரு தீர்வை முன் வைக்க வேண்டும் என்றார். குறித்த விடயத்தை பிரதமரும் ஏற்றுக்கொண்ட நிலையில் முல்லைத்மீவு மாவட்டத்திலே வாழும் 2 ஆயிரம் முஸ்லீம் மக்களிற்கு வீட்டுத் திட்டம் அமைக்க நிலம் இல்லை அதனை வழங்க இணக்கம் தெரிவிக்க வேண்டும்.
என அமைச்சர் ரிசாட் பதீயுதீன் கோரிக்கை விடுத்தார். இதன்போது மீண்டும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராசா முல்லைத்தீவில் முஸ்லீம் மக்கள் மட்டும் நிலமில்லாமல் வாழவில்லை.
அதனைவிட 9 ஆயிரம் தமிழ் மக்களும் இருக்க நிலமின்றி வாழும் நிலையில் எவ்வாறு ஒரு இனத்திற்கு மட்டும் வழங்க இணங்குவது . அதேநேரம் முஸ்லீம் மக்களிற்கு எங்கே நிலம் வழங்க சிபார்சு செய்கின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்டச் செயலாளரிடம்
கேட்டபோது கூழாமுறிப்பு பிரதேசத்தில் எனக் கூறப்பட்ட நிலையில் நான்கு பக்கமும் நிரந்தர தமிர் மக்களின் பூர்வீக இனத்தில் இன்னுமோர் கலச்சாரத்தை உடைய மக்களை மட்டும் குடியிருத்தும்போது அங்கே வாழும் மக்கள் நிலமின்மையால்
இன்றும் வீட்டு வசதியின்றியே வாழ்கின்றனர். எனவே அதனை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நிலையில் சர்ச்சை நீடித்தது. இதனால் குறித்த பகுதியில் அந்த மக்களிற்கு அதிக நிலம் அன்றி ஒரு குடும்பத்திற்கு 20 பேர்ச் நிலம் வழங்க அனுமதிக்குமாறும்
அங்கே நிலம் வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இணக்கம் தெரிவிக்கின்றபோதும் ஏனையோரே எதிர்க்கின்றனர். என அமைச்சர் ரிசாட் பதீயுதீனால் கோரப்பட்டபோது இதனை இந்த இடத்தில் முடிவு எட்ட முடியாது தனியான குழுவை அமைத்து
அதில் ஆராய்ந்து முடிவினை எட்ட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் கோரிக்கை விடுத்ததற்கமைய பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி தலமையில் அமைச்சர் ரிசாட் , நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் ,
மு.சிவமோகன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்ட சமயம் எதிர்ப்புத் தெரிவிப்பதனாலே ஓரம் கட்டப்பட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் குரல் கொடுத்த நிலையில் சாந்தி சிறீஸ்காந்தராயாவும் குழுவில் இணைக்கப்பட்டார்.