பிரதமரை நெருங்க விடாது கேப்பாபிலவு மக்களையும், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகளையும் விரட்டிய பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
பிரதமரை நெருங்க விடாது கேப்பாபிலவு மக்களையும், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகளையும் விரட்டிய பொலிஸாா்..

கேப்பாபிலவு- கிராமத்தில் உள்ள 104 குடும்பங்களுக்கு சொந்தமான காணியை விடுவிக்குமாறு கோாி பிரதமாிடம் மகஜா் கொடுக்க சென்ற மக்களை, பொலிஸாா் விரட்டியடித்துள்ளனா். 

பிரதமா் ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று சென்றிருந்தாா். 

இதன்போது கேப்பாபிலவு மக்களும், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களும் இணைந் து போராட்டம் ஒன்றை நடாத்தவும், மகஜா் ஒன்றை பிரதமருக்கு வழங்கவும் முயற்சித்தனா். 

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாா் பொதுமக்களை விரட்டிய டித்துள்ளனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு