SuperTopAds

கஞ்சா கடத்துபவா்கள் பண முதலைகளும், அரசியல்வாதிகளுமே..! பிரதமருக்கு கூறிய நாடாளுமன்ற உறுப்பினா் சாள்ஸ் நிா்மலநாதன்..

ஆசிரியர் - Editor I
கஞ்சா கடத்துபவா்கள் பண முதலைகளும், அரசியல்வாதிகளுமே..! பிரதமருக்கு கூறிய நாடாளுமன்ற உறுப்பினா் சாள்ஸ் நிா்மலநாதன்..

மன்னாா் மாவட்ட கடல் எல்லைக்குள் இந்திய மீனவா்களின் ஊடுருவலை தடுப்பதற்காக எல்லை தாண்டும் சகல இந்திய மீனவா்களையும் கைது செய்யும்படி மீனவா்கள் பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவுக்கு விடுத்த கோாிக்கை தொடா்பில் இந்திய துாதுவருடன் பேசுவதாக பிரதமா் பதில் வழ ங்கியிருக்கின்றாா். 

வடக்கிற்கு 3 நாள் பயணமாக வருகை தந்துள்ள பிரதமர் நேற்றைய தினம் மன்னார் பயணித்த நிலையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் 350 வீடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் 

மேலும் ஆயிரம் வீடுகள் வழங்க ஆவண செய்ய வேண்டும் என விடுத்த கோரிக்கை பிரதமரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேநேரம் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு 1350 மில்லியன் ரூபா தேவைப்படுவதனால் அதனை வழங்கி வைத்தியசாலையின் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் குறித்த திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந் நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் பிரதமர் தெரிவித்தார். மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்கள் பல ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் வனஜீவராசிகள் மிணைக்களம் பிடித்து வைத்திருப்பதனால் மக்களின் வாழ்வியலிற்கு பெரும் நெருக்கடி எதிர்கொள்ளப்படுவதாக 

நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார். தற்போது கோரியுள்ள குறிப்பிட்ட நில இடங்கள் இரு மாதங்களிற்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அந்த இடங்களை தாடாளுமன்ற உறுப்பினரும் திணைக்களப் பணிப்பாளரும் நேரில் சென்று பார்வையிடுவர் என பிரதமர் தெரிவித்தார்.

மாவட்டத்திற்குள் தற்போது அதிக போதைப் பொருள் எடுத்து வரப்படுகின்றது இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வேண்டும் எனக் போரப்பட்டவேளையில் அதனை மீனவர்களே எடுத்து வருவதாக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் தெரிவித்த நிலையில் அவ்வாறு எடுத்து வரப்படும் போதைப் பொருட்கள் கொழும்பிற்கு எடுத்துச் செல்பட்டுகின்றன. 

அவ்வாறு எடுத்துச் செல்பவர்கள் பெரும் பண முதலைகளும் அரசியல்வாதிகளுமே ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.