பொலிஸாரே கஞ்சா வைத்துவிட்டு பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனா், பெண் சட்டத்தரணியின் குற்றச்சாட்டை மறுத்த நீதிமன்றம்..
கஞ்சாவை பொலிஸாரே வைத்துவிட்டு சந்தேகநபா்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத் துவதாகவும், வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்டவரை யாழ்.நீதிமன்றில் முன்படுத்துவதா கவும் பெண் சட்டத்தரணி ஒருவா் நீதிமன்றில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளாா்.
பொலிஸ் நிலையத்திலும் அதிகாரிகளால் பரிசோதனைகள் இடம்பெறும். அப்படியிருக்கையில் பெரும் தொகை கஞ்சாவை காவல்துறையினர் வைத்திருப்பார்களா? என கேள்வி எழுப்பிய நீ திவான், சந்தேகநபரின் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட பிணை
விண்ணப்பத்தை நிராகரித்தார். யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் காவல் துறைப் புலனாய்வுப் பிரிவினரும் கடந்த மாத இறுதியில் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின் போது, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து பெருமளவு கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். சந்தேகநபரையும் அவரிடம் மீட்கப்பட்ட சான்றுப்பொருளையும் யாழ் ப்பாணம் காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஒப்படைத்தனர்.
சந்தேகநபரிடம் மீட்கப்பட்ட பொதியை ஆராய்ந்த போது, அதில் ஒரு கிலோ 600 கிராம் கேரள கஞ் சா மட்டுமே இருந்தது. ஏனையவை மரத்தூளாகக் காணப்பட்டது என்று காவல்துறையினர் ; தெரி வித்திருந்தனர்.
சந்தேகநபர் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சை லவன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை இன்று 15ஆம் திகதி வெள்ளிக்கிழ மைவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபர் இன்று முற்படுத்தப்பட்ட நிலை யில் சந்தேகநபர் சார்பில் பெண் சட்டத்தரணி ஒருவர்முன்னிலையானார். சந்தேகநபர் வல்வெட் டித்துறையைச் சேர்ந்தவர்.
அவரை அங்கு வைத்துக் கைது செய்த காவல்துறையினர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து இந்த மன்றில் முற்படுத்தியுள்ளனர காவல்துறையினா தங்களிடமிருந்த கஞ்சாவை வைத்துவிட் டு சந்தேகநபரிடமிருந்து அதனை மீட்டதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்என்று சட்டத்தரணி சமர்ப்பணம் செய் தார். சந்தேகநபர் வல்வெட்டித்துறையிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்த போது, யாழ்ப்பாணம் காவல் பிரிவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மீட்கப்பட்டது கேளர கஞ்சாவாகும். அவரைக் கைது செய்து கஞ்சாவை வைக்கவேண் டிய தேவை காவல்துறையினருக்கு இல்லை என்று காவல்துறை அலுவலகர் மன்றுரைத்தா ர். காவல் நிலையங்களிலும் மேலதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இவ்வளவு தொகை கஞ்சாவை அங்கு வைத்திருக்க முடியுமா? என்று கேள்விய மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார். அத்துடன், சந்தேகநபரை வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க
உத்தரவிட்ட மன்று அன்றுவரை வழக்கை ஒத்திவைத்தது.