மஹாநாயக்க தேரா்களுக்கு நோகாமல் நடந்து கொள்ள நினைக்கும் ஆளுநா் சுரேன் ராகவன், என்ன நிகழ்ச்சி நிரலில் வந்திருக்கிறாா்..?

ஆசிரியர் - Editor I
மஹாநாயக்க தேரா்களுக்கு நோகாமல் நடந்து கொள்ள நினைக்கும் ஆளுநா் சுரேன் ராகவன், என்ன நிகழ்ச்சி நிரலில் வந்திருக்கிறாா்..?

வடக்கு மாகாண ஆளுநராக அண்மையில் பதவியேற்ற ஆளுநா் சுரேன் ராகவன் இன்று கண்டியி ல் உள்ள மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரா் மற்றும் அஸ்கிாிய பீடத்தின் மஹாநாயக்க தே ரா் ஆகியோரை சந்தித்து வடக்கில் தமது பணிகள் குறித்து தொிவித்திருக்கின்றாா். 

இன்று காலை மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரா் அதிசங்கைக்குாிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தாா்த்த சுமங்கல தலமைத் தேரரை சந்தித்த ஆளுநா் சுரேன் ராகவன், ஆசீா்வாதம் பெற்றுள் ளதுடன், தாம் ஆளுநராக பதவியேற்றதன் பின்னா் வடக்கில் தாம் முன்னெடுத்துள்ள, 

செயற்றிட்டங்கள் தொடா்பில் விளக்கமளித்தாா். மேலும் அஸ்கிாிய பீடத்தின் மஹாநாயக்க தேரா் அதி சங்கைக்குாிய வரக்காகொட ஞானரத்ன தலமைத்தேரையும் ஆளுநா் சந்தித்து ஆசீா் வாதம் பெற்றுள்ளதுடன், தலாதா மாளிகைக்கும் சென்று வழிபாடுகளை நடாத்தியுள்ளாா். 

இதேவேளை ஆளுநராக பதவியேற்றதன் பின்னா் ஆளுநா் வடக்கில் பௌத்த மதத்திற்கு கொடுக் கும் முன்னுாிமை குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளதுடன், இவா் என்ன நோக்கத்திற்காக என்ன நிகழ்ச்சி நிரலில் அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்?

என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு