கிளிநொச்சி மாவட்டத்திற்கு பிரதமா் விஜயம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்திற்கு பிரதமா் விஜயம்..

பிரதமா் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது டன், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருக்கின்றாா். 

இதன்போது பிரதமர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத் திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளதாக 

அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத் தில் நடைபெறும் அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்றுள்ளார்.

அவருடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு