பொலிஸாரை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ய முயற்சித்த 3 பேருக்கு பிணை, அடையாள அணிவகுப்பிலும் அடையாளம் காணப்பட்டனா்..
யாழ்ப்பாணம்- கொடிகாமம் கெற்பேலி பகுதியில் கடமையிலிருந்த பொலிஸாா் மீது உழவு இயந் திரத்தால் மோதி தாக்குதல் நடாத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்ட 3 போ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாா்கள்.
கொடிகாமம் கெற்பேலியில் ஜனவரி 14 ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக மணல் ஏற்றப்படுவ தாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய உப பரிசோதகரும் 3 பொலிஸ் அலுவலர்க ளும் உந்துருளியில் சம்பவ இடத்தை நோக்கிச் சென்றுள்ளனர்.
வழியில் மணல் ஏற்றியபடி வாகனம் வந்துகொண்டிருந்தது. நிறுத்துமாறு பொலிஸார் கூறிய போது அவர்களை வாகனத்தால் மோதிவிட்டு வாகனச் சாரதி வாகனத்தைக் கைவிட்டுத் தப்பி யோடியுள்ளார்.
அங்கு நின்ற ஏனைய பொலிஸ் அலுவலர்கள் பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் அனுப்பிவிட்டு காயமடைந்த உப பரிசோதகரை உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு வரும்வழியில் வாகனங் களில் துரத்தி வந்தவர்கள் பொலிஸ் அலுவலர்களைத் தாக்கிவிட்டு உழவு
இயந்திரப் பெட்டிக்குள் காயமடைந்த நிலையில் காணப்பட்ட உப பரிசோதகரை தரையில் இறக்கி வைத்துவிட்டு வாகனத்தைக் கொண்டு தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர் பாக முதலில் இருவரும் பின்னர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு
நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு கடந்த 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த னர். அன்று அடையாள அணிவகுப்பு பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. நான்கு பொலிஸா ரில் இருவர் சாட்சிகளாக வருகை தந்து இருவரை அடையாளம் காட்டினர்.
ஏனைய இருவரையும் அடையாளம் காண்பிப்பதற்காக நேற்றுவரை வழக்கு ஒத்திவைக்கப்பட் டது. நேற்று இரு பொலிஸ் அலுவலர்களும் சாட்சிகளாக வருகை தந்து பதில் நீதிவான் ப.குக னேஸ்வரன் முன்னிலை யில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில்
இருவரையும் அடையாளம் காட்டினர். வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மூன்று சந்தேக நபர்களும் தலா 5 லட்சம் ரூபா ஆள்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.