தந்தை மற்றும் மகனை கொலை செய்ய முயற்சித்தமை, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீா்ப்பு..

ஆசிரியர் - Editor I
தந்தை மற்றும் மகனை கொலை செய்ய முயற்சித்தமை, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீா்ப்பு..

கிளிநொச்சியில் தந்தை மற்றும் மகன் ஆகியோரை கொலை செய்வதற்கு முயற்சித்தமை மற்று ம் அடித்து காயப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட இருவா் தமது குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், 

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிறேமசங்கா் குற்றவாளிகள் இருவருக்கும் தண்டம் விதித்ததுடன் இழப்பீடு மற்றும், ஒத்திவைக்கப்பட்ட தண்டணை விதித்து தீா்ப்பளித்துள்ளாா்.  இந்த வழக்கு தீர் ப்­புக்­காக நீதி­பதி அ.பிரே­ம­சங்­கா் முன்­னி­லை­யில் நேற்­று­முன்­தி­னம் 

விசார­ ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி கிளி­ நொச்­சி­யில் தாக்­கிக் கொலை செய்ய எத்­த­ னித்­த­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. வழக்கு சட்­ டமா அதி­பர் திணைக்­க­ளத்­தால் நீதி­வான் மன்­றி­லி­ருந்து மேல்­நீ­தி­மன்­றுக்­குப் 

பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. இரு­வ­ரும் குற்­றங்­களை ஏற்­றுக்­கொண்­ட­னர்.கொலை எத்­த­னிப்பு குற்­றத்­ துக்கு இரு­வ­ருக்­கும் தலா 8 மாதங்­கள் சாதா­ரண சிறைத்­தண்­டனை விதித்து 10 வரு­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­தோடு, தலா 2 ஆயி­ரத்து 500 ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டது.

தவ­றின் 3 மாதங்­கள் சாதா­ரண சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. பாதிக்­கப்­பட்ட தரப்­புக்கு எதி­ரி­கள் இரு­வ­ரும் தலா 40 ஆயி­ரம் ரூபா வீதம் இழப்­பீடு வழங்கவேண்­டும். தவ­றின் 40 நாள்­கள் சாதா­ரண சிறைத் தண்­டனை அனு­ப­விக்கவேண்­டும்.

இரண்­டா­வது குற்­றச்­சாட்­டான காயம் விளை­வித்­த­மைக்கு இரு­வ­ருக்­கும் தலா 3 மாதங்­கள் சாதா­ ரண சிறைத் தண்­டனை விதித்து 10 வரு­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­தோடு, ஆயி­ரம் ரூபா த ண்ட­மும் விதிக்­கப்­பட்­டது.

செலுத்­தத் தவ­றின் ஒரு மாதம் சாதா­ரண சிறைத் தண்­டனை அனு­ப­விக்­க­வேண்­டும். பாதிக்­கப்­ பட்ட தரப்­புக்கு இழப்­பீ­டாக இரு­வ­ரும் தலா 20 ஆயி­ரம் ரூபா செலுத்த வேண்­டும். தவ­றின் 10 மாதங்­கள் சாதா­ரண சிறைத் தண்­டனை அனு­ப­விக்­க­வேண்­டும் என்று 

தீர்ப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு