வனவள திணைக்களம் அடாவடி, வயல் நிலங்களையும், குளங்களையும் காடு என கூறுகிறதாம்..
மன்னாா்- நானாட்டான் பகுதியில் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களையும், குளங்களையு ம் வன பகுதி என கூறி வனவள பாதுகாப்பு திணைக்களம் தமது ஆழுகைக்குள் கொண்டுவந்திரு க்கும் நிலயில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்த அடாத்தான செயற்பாட்டை தடுக்கவேண்டும் என நானாட்டான் மக்கள் பகிரங்க கோாிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனா்.
மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகங்களில், மிகச் சிறிய பரப்பளவைக் கொண் டது நானாட்டான் பிரதேச செயலகம். அங்கு வயல்நிலங்களே அதிகமுள்ளன. கால்நடைகளுக் கான மேய்ச்சல் தரவைகள் கூட இல்லை. போர் காரணமாக ஏ-14 வீதியால் துண்டாடப்பட்டு பாது காப்பு பலப்படுத்தப்பட்டதால் அந்தக் கிராமத்து மக்கள்
அயல் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். விவசாய நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந் தது. போர் முடிந்த பின்னர் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர். அங்குள்ள வயல் வரம்புகள் அழிந் து காணிகளை அடையாளப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. அங்குள்ள காணிகளுக்கு வனவளத் திணைக்களத்தினர் எல்லைகளை வகுத்து வருகின்றனர்.
எல்லைகள் இடப்படுகின்ற காணிகளில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்குரிய சின்னத் தேத்தாக்குளி, பெரிய தேத்தாக்குளி, வேம்படிக்குளம் என சிறு குளங்கள் பலவும் உள்ளடக்கப்பட் டுள்ளன. ஆனால் முருங்கன் கமநல கேந்திரநிலையமோ அல்லது கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரோ இந்த நிலங்களை பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காணிகள் கையகப்படுத்தலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு 359 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் பயிர்ச் செய்கை இடம்பெறுகிறது. தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக 150 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் காணிகள் செய்கையின்றி உள்ளன என்றும் அங் குள்ள சுட்டிக்காட்டுகின்றனர்.