காணிகளை தாருங்கள் உங்களுக்கு வாக்களிப்பதை பற்றி பின்பு பேசலாம், பிரதமருக்கு முறையாக கொடுத்து அனுப்பிய மயிலிட்டி மக்கள்..
மயிலிட்டியில் வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு சென்ற பிரதமா் ரணில் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினா், தோ்தல் பரப்புரை நடாத்திய நிலையில், மயிலிட்டி மக்கள் தக்க பதில டி கொடுத்து திருப்பி அனுப்பியிருக்கின்றாா்கள்.
மயிலிட்டியில் வீட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நடுவதற்கு பிரதமா் ரணில் விக்கிரம சிங்க நேற்றுச் சென்றிருந்தார். அடிக்கல் நடுகை செய்த பின்னர், அந்தப் பகுதியில் திரண்டிருந்த மக்களைச் சந்திப்பதற்கு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க சென்றிருந்தார்.
தங்கள் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அவற்றை விரைவாக விடுவிக்குமாறு மக் கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர்தான் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
இன்னமும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன என்று மக்கள் பதில் தெரிவித்தார்கள். நீங் கள் மீண்டும் ஐயாவை (பிரதமா் ரணில் விக்கிரமசிங்க) வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் உங்கள் காணிகளை விடுவிக்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.
நீங்கள் எங்கள் காணிகளை விடுவித்தால் உங்களுக்கு நாங்கள் வாக்களிக்கின்றோம் என்று அந்த மக்கள் பதிலடி கொடுத்தனர். பிரதமா் உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து நகர்ந்தனா். இதன்போது அங்கே தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்களும் இருந்தனா்.