வடக்கு ஆளுநரை சந்தித்த இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி, பொருளாதா அபிவிருத்தி திட்டங்கள் வேண்டும் எனக்கேட்ட ஆளுநா்..

ஆசிரியர் - Editor I
வடக்கு ஆளுநரை சந்தித்த இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி, பொருளாதா அபிவிருத்தி திட்டங்கள் வேண்டும் எனக்கேட்ட ஆளுநா்..

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. 

வட மாகாணத்தில் நிலவும் காணி, வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வட மாகாணத்தில் பாதுகாப்பு படைகளிடமுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் விவசாயப் பண்ணைகள் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  உத்தரவின் பேரில் படிப்படியாக பொதுமக்களிடம் விடுவிக்கப்பட்டு 

வருவதால் வட மாகாணத்தில் ஏற்கனவே தேவையாகவுள்ள வீடுகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதால் அதுதொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு இந்தியாவில் அகதிகளாக வாழும் வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவியையும் ஆளுநர்  இதன்போது கோரினார்.

அத்தோடு வட மாகாணத்தில் ஐ.நா மேற்கொள்ளும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தனது நன்றியினை தெரிவித்த ஆளுநர்  போருக்கு மோசமாக முகம் கொடுத்த மக்கள் வாழும் மாகாணமாக வட மாகாணம் காணப்படுவதால் 

இந்த மாகணத்தில் வாழும் மக்கள் பொருளாதார ரீதயில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்து அம்மக்கள் வெளியே வரக்கூடிய செயற்திட்டங்களையும் முன்னெடுக்குமாறு ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் கோரிக்கையினை முன்வைத்தார்.

இதன்போது கருந்துத் தெரிவித்த இலங்கைக்கான ஐநா வதிவிடப் பிரதிநிதி வட மாகாண ஆளுநருடனான இந்த சந்திப்பு மிகுந்த ஆரோக்கியமாக அமைந்திருந்ததுடன் ஆளுநருடைய கோரிக்கைகள் தொடர்பில் அவதானத்தை செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஆகியோரும் இந்தச் சந்திபில் கலந்து கொண்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு