சிறிய மற்றும் நடுத்தர வா்த்தக முதலீட்டாளா்கள், சிறு கைத்தொழில் முயற்சியாளா்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..
வடமாகாணத்தில் நடுத்தர, சிறிய பொருளாதார ரீதியாக நலிவடைந்து காணப்பட்டுயிருக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு மக்கள் நல செயற்றிட்டகளை முன்னேடுக்க உள்ளதாக பிரதி அமைச்சர் இத்திக பத்திரண தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் வடமாகாண கைத்தொழில் வர்த்தக அதிகார சபை ஆகியவற்றின் எற்பாட்டில் வடமாகாணத்தில் கைத்தொழில் வர்த்தக தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கண்டறியும் நோக்கிலான சந்திப்பு இன்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில்
கைத்தொழில்,மற்றும் வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் எ.அனோல் ஜெயந்த தலைமையில் நடைபெற்றது..
இவ் சந்திப்பில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் இத்திக பத்திரண கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கைத்தொழில், வர்த்தக துறைசார்ந்த கட்டமைப்பினை ஒப்பிட்டுபார்க்கின்றபோது 86 வீதமான வளர்ச்சி வீதம் காணப்படுகின்றது.எனவே இவ்வாறான வளர்ச்சி வீதம் அதிகாரிக்கப்படவேண்டும்.
எனவே அவ்வாறான ஊக்குவிப்பு என்பது எனைய மாகாணங்களில் இருந்தும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முன்மொழிவுக்கு ஐனாதிபதி,மற்றும் பிரதமர் ஆகியோர்கள் முழு அளவிலான பங்களிப்பினை வழங்கயுள்ளனர்.
குறிப்பாக நாட்டின் பொருளாதார விஸ்த்திரத்தன்மையினை உயர்த்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.அவ்வாறான வலுவான கட்டமைப்பிற்காக புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பினையும் ஒத்துழைப்பினையும் வழங்க முன்வரவேண்டும்.
வடமாகாணத்தில் ஏனைய வளங்களை விட தனிப்பட்ட ஒரு விடயத்திற்கான ஆரம்ப கைத்தொழிற்சாலை இன்னும் பல இடர்நிலையில் காணப்படுகின்ற நிலை வேதனை அளிக்கின்றது..அவற்றினையும் மீண்டும் மக்களிடம் கையளிக்க எதிர்பார்க்கின்றோம். என தெரிவித்தார்
இவ் சந்திப்பில் முயற்சியாளர்களின் அபிவிருத்தி பங்குபற்றியும், புலம் பெயர்ந்தயிருக்கும் தமிழ் முதலீட்டாளர்களின் பங்குகள், அரசாங்கத்தின் ஊடாக தொழிற்சாலைகள் விஸ்தரிப்பான செயற்பாடுகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துறையாடப்பட்டன.
குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் சுகுரணதி தெய்வேந்திரம்,மற்றும் வடமாகாண கைத்தொழில் வர்த்தக அதிகார சபை பணிப்பாளர் எ.பாலசுப்பிரமணியம், அமைச்சின் உயர் அதிகாரிகள் தொழில் முயற்சியாளர்கள்,பலரும் கலந்துகொண்டனர்.