1 மாத குழந்தை திடீரென மரணம், உடற்கூற்று பாிசோதனையில் வெளியான உண்மை..

ஆசிரியர் - Editor I
1 மாத குழந்தை திடீரென மரணம், உடற்கூற்று பாிசோதனையில் வெளியான உண்மை..

வவுனியாவில் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை புரக்கேறி மூச்சு திணறிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிாிழந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் இதயத்தில் இருந்த துவாரம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10ஆம் திகதி வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பம் ஒன்றின் ரங்கநாதன் ரவீன் என்ற ஒரு மாதக் குழந்தைக்கு தாய்பால் புரக்கேறிய நிலையில் உடனடியாக குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் 

சிகிச்சை பலனின்றி குழந்தை மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குழந்தையின் உடற்கூற்று மருத்துவ பரிசோதனையில் குழந்தையின் இதயத்தில் துவாரம் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தாய் வவுனியா வைத்தியசாலையிலேயே குழந்தையை பிரசவித்த அதேவேளை, வைத்தியசாலை வைத்தியர்களின் மருத்துவ அறிக்கையிலும் குழந்தை ஆரோக்கியமனது என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் தற்போது குழந்தை இறந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் இதயத்தில் துவாரம்

 இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டமை பெற்றோர், உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பிறந்த பின் வைத்தியர்கள் சரியான முறையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளாமையே 

தமதுகுழந்தையின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேவேளை, மேலதிக உடற்கூற்று மருத்துவ பரிசோதனைக்காக குழந்தையின் உடல் பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு