SuperTopAds

யாழ்.பிரதேச செயலகத்தின் பம்மாத்து கதை, காலை இழந்த குடும்பஸ்த்தா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பிரதேச செயலகத்தின் பம்மாத்து கதை, காலை இழந்த குடும்பஸ்த்தா்..

வீடு கட்டி தருகிறோம் என யாழ்.பிரதேச செயலகம் வழங்கிய வாக்குறுதியை நம்பி 7 வருடங்க ள் வாழ்ந்த கொட்டிலை அகற்றிய குடும்பத்தஸ்த்தா் அந்த கொட்டில் சாிந்து விழுந்ததில் கால் முறிவடைந்த நிலையில் குறித்த குடும்பஸ்த்தா் படுக்கையில் உள்ளாா். 

ஆனால் வீட்டு திட்டம் கிடைக்கவுள்ளது என தாம் தவறாக கூறிவிட்டோம். என யாழ்.பிரதேச செ யலகம் பொறுப்பற்ற வகையில் பதிலளித்திருக்கின்றது. இந்நிலையில் குறித்த குடும்பஸ்த்தா் தற்போது வீடு இல்லாத நிலையில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாா். 

யாழ்ப்­பாண பிர­தேச செய­லர் பிரி­வுக்கு உட்­பட்ட இலக்­கம் 30, காரை­ந­கர் வீதி, மீனாட்­சி­பு­ரம் கோட்டை என்­னும் முக­வ­ரி­யில் உள்ள குடும்­பத்­தி­னரே இத்­த­கைய நெருக்­க­டியை எதிர்­கொண்­ டுள்ளாா். 

19ஆண்­டு­க­ளாக வீடு இல்லை

திரு­ம­ண­மாகி கடந்த 19 ஆண்­டு­க­ளாக சொந்­தக் காணி, வீட்டு வச­தி­யின்றி இர­வல் காணி­யில் மு.சத்­தி­ய­கு­மார் இருந்­துள்­ளார். கூலி­ வே­லை­க­ளைச் செய்து வாழ்க்­ கையை நடத்தி வரு­கின்­ றாா். கடும் உழைப்­பால் யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­லர் 

பிரி­வுக்­குட்­பட்ட இலக்­கம் 30 காரை­ந­கர் வீதி, மீனாட்­சி­பு­ரம், கோட்டை எனும் முக­வ­ரி­யில் உள்ள காணியை வாங்­ கி­யுள்­ளார். அதில் தக­ரக் கொட்­டில் ஒன்றை அமைத்து அங்கு வசித்­துள்­ளார். அவ­ருக்கு இரண்டு பிள்­ளைகள் 

பாடசாலை செல்கின்றனா்.  அவர்­க­ளு­டைய கல்­விச் செலவு, உள்­பட வாழ்­வா­தா­ரம் அனைத்­தும் அவ­ரு­டைய உழைப்­பில் இருந்தே பெறப்­ப­டு­கின்­றன. சொந்­தக் காணி வைத்­தி­ருந்­தும், கடந்த 7ஆண்­டு­க­ளாக எந்­த­வொரு வீட்­டுத்­திட்­ட­மும் சத்­தி­ய­கு­மா­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

வீட்­டுத் திட்­டம்

கடந்த 23ஆம் திகதி யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட வீடு­கள் அற்ற மக்­க­ளுக்கு பிர­தேச செய­ல­கத்­தில் கூட்­டம் இடம்­பெற்­றது. யாழ்ப்­பா­ணத்­துக்கு 175 வீடு­கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. இடைக்­கால கணக்கு அறிக்­கை­யின் ஊடாக 48 வீடு­க­ளுக்கு 

முதல்­கட்­ட­மாக நிதி கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. மீனாட்­சி­பு­ரம் பகு­தி­யில் 5 வீடு­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. சத்­தி­ய­கு­மா­ரும் அதில் ஒரு பய­னா­ளி­யா­கத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். என்று அறிவ।ிக்கப்பட்டுள்ளது.

வீடு­க­ளுக்­கான அடிக்­கல் நடு­வ­தற்கு நாளையே – உட­ன­டி­யான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு பிர­தேச செய­ல­கத்­தி­னர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர். சத்­தி­ய­கு­மா­ரின் காணி சிறி­யது. தங்­கி­யி­ருந்த தற்­கா­லி­கக் கொட்­டிலை அகற்­றி­னாலே வீடு 

அமைக்க முடி­யும். அத­னை­ய­டுத்து இர­வோடு இர­வாக சத்­தி­ய­கு­மார் தற்­கா­லி­கக் கொட்­ டிலை அகற்­றி­யுள்­ளார்.

கால் முறிந்­தது

எதிர்­பா­ராத வித­மாக கொட்­டில் சரிந்து சத்­தி­ய­கு­மா­ரின் மேல் வீழ்ந்­தது. அவர் படு­கா­ம­டைந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ டார். அவ­ருக்கு கால் முறிந்­துள்­ளது என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

 அவருடைய காலில் தகடு வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆறு மாதங்­கள் அவர் படுக்­கை­யி­லேயே இருக்க வேண்­டும் என்­றும் கூறி­யுள்­ள­னர். வீடு அமைப்­ப­தற்கு கடன் வாங்கி, கல் மற்­றும் மண் போன்­ற­வற்றை சத்­தி­ய­கு­மார் கொள்­வ­னவு செய்­துள்­ளார்.

 பிர­தேச செய­ல­கத்­தால் நடத்­தப்­பட்ட கூட்­டத்­துக்­குப் பின்­னர் பிர­தேச செய­ல­கம் சத்­தி­ய­கு­மா­ரு­ட­னோ, அவ­ரது மனை­வி­யு­டனோ தொடர்பு கொள்­ள­வில்லை.

ஏமாற்­றம்

சத்­தி­ய­கு­மா­ரின் மனைவி ஒரு வாரத்­தின் பின்­னர், பிர­தேச செய­ல­கம் சென்­றுள்­ளார். வீடு தொடர்­பில் விசா­ரித்­தார். அவ­ருக்­குப் பேர­திர்ச்சி கொடுக்­கும் தக­வலை பிர­தேச செய­ல­கம் தெரி­வித்­துள்­ளது. 

வீடு உங்­க­ளுக்கு வர­வில்லை, தவ­று­த­லாக நீங்­கள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளீர்­கள் எனப் பிர­தேச செய­ல­கம் தெரி­வித்­துள்­ளது என்று சத்­தி­ய­கு­மா­ரின் மனைவி தெரி­வித்­தார். மாவட்­டச் செய­ல­கத்­துக்­குச் சென்று விவ­ரங்­க­ளைப் பார்த்­த­போ­தும் அதில் தமது பெயர் இல்லை என்­றும் சத்­தி­ய­கு­மா­ரின் மனைவி குறிப்­பிட்­டார்.

அவ­லம்

கொட்­டில் வீடு என்­றா­லும் நாளாந்­தம் உழைக்­கும் பணத்­தில் வாழ்ந்த சத்­தி­ய­கு­மார் குடும்­பம் தற்­போது அந்­தக் கொட்­டி­லும் இன்றி, வாழ்­வ­தற்கு வீடும் இன்றி, சத்­தி­ ய­கு­மா­ரின் உழைப்­பும் இன்­றித் துவண்­டு­போ­யுள்­ளது.

 ‘கடும் உழைப்­பாளி மாதம் 20ஆயி­ரம் ரூபாய் உழைப்­பார். அதி­லேயே பிள்­ளை­க­ளின் கல்­விச் செலவு, சாப்­ பாடு என்று வாழ்ந்­து­வந்­தோம். இப்­போது வாழ்­வ­தற்கு வழி­யற்று நிற்­கின்­றோம்.

ஆறு­மா­தங்­கள் படுத்­தி­ருந்தே காயத்தை ஆற்ற வேண்­டும் என்று மருத்­து­வர்­கள் கூறி­யுள்­ள­னர். இனி எமக்கு எப்­படி வரு­மா­னம். இரண்டு பிள்­ளை­களை வைத்­துக் கொண்டு நான் எங்கு செல்­வேன். தற்­போது அய­லில் உள்ள ஒரு வீட்­டில் அடைக்­க­லம் புகுந்­துள்­ளோம்.

 படுக்­கை­யில் உள்ள எனது கண­வ­ரை­யும், பாட­சாலை செல்­ லும் பிள்­ளை­க­ளை­யும் எத்­தனை நாளைக்கு இங்யே வைத்­தி­ருக்க முடி­யும். எமக்கு வீடு கிடைத்­துள்­ளது என்று கூறி கடி­தம் தந்­த­தால் தானே நாங்­கள் கொட்­டி­லைக் கழற்­றி­னோம். 

கடன்­பட்டு கல், மண் பறித்­தோம். இப்­போது அந்­தக் கடனை யார் கட்­டு­வார்­கள், நாங்­கள் சாப்­பி­டு­வ­தற்கு என்ன செய்­யப்­போ­கின்­றோம்?’ என்று சத்­ தி­ய­கு­மா­ரின் மனைவி கண்­ணீர் வடித்­தார்.

பதி­லில்லை

சம்­ப­வம் தொடர்­பில் யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­லர் பொ.தயா­னந்­த­னின் தனிப்­பட்ட அலை­பேசி இலக்­கத்­துக்கு நேற்­றுப் பகல் 1.10 மணிக்கு இரண்டு முறை அழைப்பு எடுத்­த­ போ­தும் அவர் பதி­ல­ளிக்­க­வில்லை. மீண்­டும் 1.16 மணிக்கு அலு­வக தொலை­பே­சிக்கு அழைத்­த­போ­தும் 

பதி­ல­ளிக்­க­வில்லை. மூன்­றா­வது தட­வை­ யாக பகல் 1.50 மணிக்கு பிர­தேச செய­ல­ரின் தனிப்­பட்ட அலை­பே­சிக்கு அழைப்பு எடுத்­த­போ­தும் அதற்­கும் பதி­ல­ளிக்­க­வில்லை. இறு­தி­யாக 1.52 மணிக்கு அலு­வ­ல­ கத் தொலை­பே­சிக்கு அழைப்பு எடுத்­த­போ­தும் பதி­ல­ளிக்­க­வில்லை.

நன்றி- உதயன்..