பிரதமாின் வருகிறாா் என்பதற்காக பகட்டுக்கு வீதியை திருத்திய அதிகாாிகள், அடிக்க சென்ற பொதுமக்கள்..

ஆசிரியர் - Editor I
பிரதமாின் வருகிறாா் என்பதற்காக பகட்டுக்கு வீதியை திருத்திய அதிகாாிகள், அடிக்க சென்ற பொதுமக்கள்..

மன்னாா்- பள்ளிமுனை கிராமத்தில் மிக நீண்டகாலம் புனரமைப்பு செய்யப்படாமலிருந்த வீதி பிரதமா் ரணில் வருகை யினை முன்னிட்டு எழுத்தமானமாக புனரமைப்பு செய்யப்படும் நிலை யில் புனரமைப்பு செய்ய வந்தவா்களுடன் கிராம மக்கள் முரண்பட்டுள்ளனா். 

மன்னார் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான பெருக்க மரம் அமைந்துள்ள சுற்றுலா கிராமமான பள்ளிமுனை கிராமம் காணப்படுகின்றது. குறித்த கிராமத்திற்கான பிரதான வீதி சீரான முறையில் அமைக்கப்படவில்லை 

இது தொடர்பாக பல முறை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் ஒழுங்கான நாடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. இன்று வெறுமனே கண் துடைப்புக்கு என பல முறை வீதிகளை தற்காலி மாக நிறப்பி விட்டுச் சென்கின்றனர்.

குறித்த வீதியை முழுமையாகச் சீரமைக்குத் வரை வீதியை தற்காலிகமாக சீரமைக்க அனுமதி க்கப்போவதில்லை என மக்கள் தொிவித்தனா். மக்கள் எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த அதிகாரி, 

உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறி சம்பவ இடத்தை விட்டு சென்றார். மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் பங்குதந்தை மக்களிடம் உரையாடியதை தொடர்ந்து மக்கள் தற்காலிகப் பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதித்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வருகைக்காக குறித்த பாதைகளில் உள்ள குழிகளை மூடி பாதையை அழகு படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு