கிளிநொச்சி மாவட்டத்தில் மீன்பிடி உற்பத்தியில் படுமோசமான வீழ்ச்சி..
கிளிநொச்சி மாவட்டத்திலும் 2017ம் ஆண்டை காட்டிலும் 2018ம் ஆண்டில் மீன்பிடி உற்பத்தி படு மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீாியல்வளத்துறை தி ணைக்கள தகவல்கள் தொிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் போரிற்குப் போரிற்கு பின்னர் 4 ஆயிரத்து 113 குடும்பங்களகச் சேர் ந்த 16 ஆயிரத்து 801 மீனவர்கள் கடற்றொழிலை நம்பி வாழும் நிலையில் இக் குடும்ப ங்களில் இருந்து தற்போது 3 ஆயிரத்து 784 மீனவர்களே தொழில் புரிகின்றனர்.
இந்த 3 ஆயிரத்து 784 மீனவர்களின் தொழிலிற்காகவும் மாவட்டம் முழுமையாக 1004 கடற்கல ங்கள் உள்ளன. இவ்வாறு வாழும் மீனவர்களின் 2018 ஆம் ஆண்டின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர்களின் முதலீடுகளிற்காகவும் கிடைத்த மொத்த உற்பத்தியானது.
10 ஆயிரத்து 471 மெற்றிக்தொன் கடல் உணவுகள். மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதே நேரம் 20 17ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் உற்பத்தியானது. 11 ஆயிரத்து 664 மெற்றிக் தொன் னாக கானப்பட்டது.
இந்த வகையில் 2017 ஆம் ஆண்டிற்கும் 2018 ஆம் ஆண்டிற்கும் இடையில் ஆயிரத்து 200 வரை யான மெற்றிக் தொன் உற்பத்தி மாவட்டத்தில் குறைவாகவே கிடைக்கப்பெற்றுள்ளது.