மருந்தடித்து பழுக்கவைக்கப்பட்ட பழங்களை கண்டுபிடிக்க விசேட செயலணி..
நல்லுாா் பிரதேசசபையின் எல்லைக்குள் இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டு பழுக்கைவக்க ப்பட்ட பழங்களை கண்டு பிடிப்பதற்கு சிறப்பு செயலணி ஒன்று உருவாக்க தீா்மானிக்கப்பட்டி ருக்கின்றது.
நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் த.தியாகமூர்த்தி தலைமையி ல் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்விலே சபை உறுப்பினர் கௌசல்யா குறித்த தீர்மான வரை வை முன்மொழிந்தார்.
அவர் தனது தீர்மான வரைவில், பொதுமக்களுக்கு பெரும் நோய்களை ஏற்படுத்தி உயிர் ஆபத் தைக் கொண்டுவரும் மருந்து விசிறிய பழங்களை முற்றாகத் தடை செய்ய வேண்டும் – என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சபை உறுப்பினர் இராசலிங்கம், சந்தைகளிலும் பழக் கடை களிலும் ஏராளமான மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வாங் கி உட்கொள்பவர்கள் பல பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே இதற்கென நாம் சிறப்புச் செயலணி ஒன்றை பொதுசுகாதார பரிசோதகர் தலைமை யில் உருவாக்கி விரைவான செயற்பாட்டில் இறங்க வேண்டும் – என்றார்.