இரணைமடு விவகாரம், சதிதிட்டம் தீட்டும் வடக்கு ஆளுநா், இராணுவத்தை கொண்டு விவசாயிகளை அடக்கவும் தீா்மானம்..
இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீா் திட்டத்தை கிளிநொச்சி விவசாயிகளின் எதிா்ப்பினையும் மீறி நடைமுறைப்படுத்துவதற்கு பாாிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக ஆளுநா் கொழும்பில் இரகசிய சந்திப்புக்களை மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
இந்த தகவல்களின் படி கொழும்பில் நாடாளுமன்றம் அருகில் உள்ள லில்லி அவனீயூவில் ஆளுநாின் கொழும்பு அலுவலகத்தில் இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீா் திட்டம் தொடா்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. இந்த கலந்துரையாடலில் வடமாகாண நீா் வழங்கல் திணைக்கள பணிப்பாளா்,
வடமாகாண நீா்ப்பாசன திணைக்கள பணிப்பாளா் உள்ளிட்ட அதிகாாிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டிருக்கின்றனா். இந்த இரகசிய கூட்டத்தின்போது நீா் வழங்கல் திணைக்கள பணிப்பாளா் பொறியியலாளா் பாரதிதாஸன் இரணைமடு திட்டத்தை நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என கடுமையாக வாதிட்டுள்ளாா்.
இதன்படி இரணைமடு குளத்தின் மையத்தில் பாாிய கிணறு ஒன்றை அகழ்ந்து அதிலிருந்து நீா் பெற்று யாழ்ப்பாணத்திற்கான குடிநீா் விநியோகத்தை மேற்கொள்ளுமாறும் அதனை எவா் தடுத்தாலும் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் விவசாயிகள் எதிா்த்தால் இராணுவத்தை கொண்டு அதனை அடக்கவேண்டும் எனவும், அவா் ஆலோசனை கூறியுள்ளாராம்,