SuperTopAds

வடகிழக்கு மாகாணங்களுக்கு ஐ.நா அமைதிப்படையை அனுப்புங்கள், ஐ.நா அலுவலகத்தில் மகஜா் கையளிப்பு..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு மாகாணங்களுக்கு ஐ.நா அமைதிப்படையை அனுப்புங்கள், ஐ.நா அலுவலகத்தில் மகஜா் கையளிப்பு..

இலங்கை அரசை சா்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துங்கள், வடகிழக்குக்கு ஐ.நா அமை திப்படையை அனுப்புங்கள் என்பன போன்ற 3 அம்ச கோாிக்கைகளை முன்வைத்து தமிழா் தா யகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் சங்கம் யாழ்ப்பா ணத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜா் ஒன்றை கையளித்துள்ளனா். 

இன்று பிற்பகல் இந்த மகஜா் கையளிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மகஜாில் மேலும் கூறப்பட்டு ள்ளதாவது. 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு  ஸ்ரீலங்கா  போர்க்குற்றங்களைக் கொண்டு செல்லவும் . சர்வசன வாக்கெடுப்பு மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படை தேவையும்  மேன்மை தங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களே,

காணாமற்போன பிள்ளைகளின் தாய்மார்கள் நாங்கள்,  பின்வரும் எமது வேண்டுகோளுக்கு  ஆதரவளிக்க உங்களை பணிவாக கேட்டுக்கொள்கிறோம்:

1. ஸ்ரீலங்கா போர்க் குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லவும்.

2. 2011ல் தென் சூடானில் ஐ.நா. செய்தது போல் ஸ்ரீலங்காவின் வடகிழக்கில் தமது பண்டைய தமிழ் தாயகத்தின் வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தீர்மானிக்க ஐ.நா. ஆதரவளிக்கும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவும்.

3. ஸ்ரீலங்கா இராணுவத்தை தமிழ் தாயகத்திலிருந்து  (ஸ்ரீலங்காவின் வடகிழக்கு)அகற்றுவதற்கு.  ஐ.நா அமைதிப் படைகளை அனுப்பவும். 

2016 ல் இருந்து வவுனியாவில் காணாமற்போன குழந்தைகளின் தாய்மார்கள் ஆர்ப்பாட்டம் இன்று 719 வது நாளாகும். எங்கள் போராட்ட த்தின்  ஒரு பகுதியாக, நாள் ஒன்றுக்கு எங்கள் ஒரு உணவை தவிர்ப்பு மூலம் உண்ணாவிரதம் இருக்கிறோம்.

எங்களுடன்  எங்கள் போராட்ட த்தில்  கலந்துகொண்டிருந்த கடத்தப்பட்டவர்களின்  தாய்மார்கள் பலரை இழந்தோம். அவர்கள் மீது தீவிர உளவியல் மனஅழுத்தம் காரணமாக இறந்துவிட்டார்கள். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற நம்பகமான அமைப்புக்கள் மூலம் விசாரணைகள் நடைபெறாவிட்டால், 

மீதமுள்ள  தாய்மார்களின் உடல் நலத்தின் நிலைமை மேலும் மோசமாகிவிடும். 2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டபோது எங்கள் பிள்ளைகள் இளம் வயதினர்; இப்போது அவர்கள் இருபதுகளில் இருக்கிறார்கள். ஸ்ரீலங்காவில் அவர்கள்  உயிருடன் இருப்பதை நாங்கள் அறிவோம். 

இராணுவம் எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றிய சில தகவல்கள் எங்களிடம் உள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  போன்ற சக்திவாய்ந்த அமைப்புக்களால் மட்டுமே அவற்றைக் கண்டுபிடிக்க முடியும். முக்கிய ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  மூலம் விசாரண மேற்கொள்ளப்பட்டால், 

அனைத்து தகவலும் பனிக்கட்டி போன்று  உருகத் தொடங்கும். எனவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமத்திற்கு  இலங்கை போர்க்குற்றங்களைகொண்டு செல்லுமாறு   தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம் . இது நமக்கு நியாயம் தரும். இதுதான் நாம் பல காலமாக எதிர்பார்த்து கொண்டுள்ளோம். 

ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் பொருளாதாரம், கலாச்சாரம், எங்கள் பண்ணை, வீடுகள் மற்றும் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. இராணுவம் நிதி ரீதியாக பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை  வன்முறைக்கு பாவிக்கிறது, மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்களின் போதையை தமிழ் இளைஞர்களுக்கு விற்க அனுமதிக்கிறது.

 இது  தமிழ் மக்களின் ஜனநாயக பங்களிப்பு மற்றும் எதிர்ப்புக்களைத் தடுக்க வைக்கிறது. இது எங்கள் தமிழ் சிறுவர்களை அழித்துக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்கா இராணுவத்தின் பிரசன்னம் காரணமாக, சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த ஆலயங்களை கட்டியமைத்தல், தமிழ் கிராமத்தின் சிங்களமயமாக்கல் இடம்பெற்றுள்ளது. 

சிறீலங்கா இராணுவம் தமிழ் பெண்களையும், ஆண்களையும் பாலியல் அடிமைகளாக தங்கள் முகாம்களில் வைத்திருக்கிறது. இது ஒரு இனத்தின் இனப்படுகொலை மற்றும் அழிவின் ஒரு பகுதியாகும்.

ஸ்ரீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தமிழ் தாயகத்தில்  கற்பழிப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை தினசரி நிகழ்வுகள். மேலும், காணாமற் போன உலகின் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் உள்ளனர்.

வடகிழக்கு தமிழ் தாயகத்திற்கு  ஐ.நா. சக்தியை அனுப்புவதற்கும், சிங்கள இராணுவத்தை மாற்றியமைக்கும் நேரம் இது.

ஸ்ரீலங்கா சிங்களத் தலைவர்கள் எந்தவொரு இராணுவ அல்லது போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்க மாட்டார்கள் என பல முறை கூறினர். கடந்த எழுபது ஆண்டுகளாக  வலிமையான கதைதான் தமிழரின்  சுதந்திரமாக வாழ்வதற்க்கான போராட்டம். 

2009 ல் 148,000 க்கும் அதிகமான தமிழர்களைக் கொன்ற பின்னர், சிங்களத் தலைவர்கள், தமிழ் மக்களுடன் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று எங்களிடம் கூறினர். இப்போது தெற்கு சூடானுடனில்  ஐ.நா. செய்தது போல் ஒரு அரசியல் தீர்வாக தமிழர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் இது.

நீங்கள்  விரைவில் எமது நியாயமான கோரிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும், இல்லையெனில் பெரும்பான்மையான தமிழர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு  மற்றும் பலர் மறைந்து போவார்கள். அத்துடன்  பண்டைய தமிழ் கலாச்சாரம் அழிந்துபோகும். என கூறப்பட்டுள்ளது.