செய்தி சேகாிக்க சென்ற ஊடகவியலாளா்களை இராணுவம், பொலிஸ் இணைந்து அச்சுறுத்தல்..
முல்லைத்தீவு- தண்ணீருற்று பகுதியில் இராணுவத்தினா் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான குடிநீா் குழாய் கிணற்றிலி ருந்து தினசாி பல லட்சம் லீற்றா் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில்,
அது தொடா்பாக செய்தி சேகாிக்க சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளா்களை பொலிஸாரும், இராணுவத்தின ரும் இணைந்து கடுமையாக அச்சுறுத்தியிருக்கின்றனா்.
இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது. இது தொடா்பாக மேலும் தொியவருவதாவது, தண்ணீரூற்று பகுதியில் பொ துமக்களின் பயன்பாட்டுக்கான குடிநீா் குழாய் கிணற்றிலிருந்து,
தினசாி பல லட்சம் லீற்றா் தண்ணீரை இராணுவத்தினா் பவுசா்களில் கொண்டு செல்கின்றனா். இந்நிலையில் குறித்த வி டயம் தொடா்பாக இன்று மதியம் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளா்கள் இருவா்
செய்தி சேகாிக்க சென்றிருந்தனா். இந்நிலையில் ஊடகவியலாளா்களை தடுத்த இராணுவத்தினா் ஊடகவியலாளா்களின் கமராவை பறிக்க முயற்சித்ததுடன், பொலிஸாரையும் அந்த இடத்திற்கு அழைத்து,
ஊடகவியலாளா்களை அச்சுறுத்தி கமராவை பறிக்க முயற்சித்தனா் எனினும் ஊடகவியலாளா்கள் திடமாக நின்றதுடன் எக்காரணம் கொண்டும் கமராவை கொடுக்க முடியாது என மறுத்தனா்.
இதனையடுத்து பொலிஸாா் இராணுவத்தை நியாயப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளா்கள் அங்கிருந் து திரும்பியுள்ளனா்.