வடக்கில் பௌத்த மயமாக்கலை தீவிரப்படுத்த பௌத்த மாநாடு..

ஆசிரியர் - Editor
வடக்கில் பௌத்த மயமாக்கலை தீவிரப்படுத்த பௌத்த மாநாடு..

பௌத்த மத மாநாடு ஒன்றை இம்முறை வடக்கில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் நடாத் துவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், இதன்படி எதிர்வரும் 22ம் திகதி இந்த மாநாடு நடக்கும் எனவும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

வவுனியாவிலுள்ள ஸ்ரீபோதிதக்ஷணாராமய விஹாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராஇ இதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க 

இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவகம் குறிப்பிட்டுள்ளது. வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுக் கொள்வதே 

இந்த மாநாடு நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் என வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார். இதேவேளை வடக்கில் துரித கதியில் பௌத்த மயமாக்கல் இடம்பெற்றுவரும் நிலையில் பெ ளத்த மாநாடும் நடத்தப்படுவது மக்களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 

Radio
×