சாரய பிரியர்களின் கூடாரமாக மாறியிருக்கும் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம், அதிகாரிகளின் அசமந்தம்..
கிளிநொச்சி மாவட்டத்திற்கான மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அரைகுறையாக கி டக்கிறது. இந்நிலையில் குடிகாரர்கள் குடிப்பதற்கும், சமூக பிறழ்வு நடத்தைகளில் ஈடு படுவதற் குமான இடமாக இந்த இடம் தற்போது பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
குறித்த பேருந்து நிலையம் கடந்த சில வருடங்களாக தொடர் கட்டுமானப் பணிகள் எவையும் இ ல்லாம் அப்படியே விடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் மாவட்டச் செயலகத்திடம் வினவிய போது கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்திற்கும் தங்களுக்கும்
தொடர்பில்லை எனவும் மாகாண சபையிடம் வினவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆ னால் மாகாண போக்குவரத்துக்கு பொறுப்பாகவுள்ள அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த பேரூந்து நிலையத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை
என்றும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலமே அமைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் குறித்த பேரூந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் தடைப்பட்டு அரைகுறையாக காணப்பட்டு வருகிறது.
இதனை மேற்கொண்டு அபிவிருத்தி செய்து கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிரந்தர பேரூந்து நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அதிகாரிகள்இ அரசியல் தரப்புக்கள் எவரும் அக்கறை செலுத்தவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அரைகுறையாக உள்ள பேரூந்து நிலையம் தற்போது மதுபானம் பாவனையாளர்களாலும்இ மலசலம் கழிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது. மீள்குடியேற்றத்திற்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு திணைக்களங்களின் கட்டடங்கள்
அமைக்கப்பட்டு உட்கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பேரூந்து நிலையம் மாத்திரம் அரைகுறையாக இருப்பது தொடர்பில் உரிய திணைக்களங்கள் கவனம் செலுத்த வில்லை என பொது மக்கள் தரப்பால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது பொது மக்கள் வெயில் மழை நிலைமைகளின் போது மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு தங்களின் போக்குரத்து தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.