SuperTopAds

சமய வழிபாடு, உடற்பயிற்சி, யோகா இனி கட்டாயம், வடமாகாண கல்வி அமைச்சு உத்தரவு..

ஆசிரியர் - Editor I
சமய வழிபாடு, உடற்பயிற்சி, யோகா இனி கட்டாயம், வடமாகாண கல்வி அமைச்சு உத்தரவு..

வடமாகாண பாடசாலைகள் அனைத்திலும் எதிா்வரும் 18ம் திகதி தொடக்கம் காலை சமய வழி பாட்டுடன் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றன செய்வதை வடமாகாண கல்வி அமைச்சு க ட்டாயமாக்கியிருக்கின்றது. 

முறையான உடற்பயிற்சி எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும் வகையிலான இறுவட்டையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. வட மாகாணத்திலுள்ள பாடசாலை மாண வர்களை இணைத்து யோகா உடற்பயிற்சி காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 நிமிடங்களை கொண்டமைந்துள்ள இந்த காணொளியில் வரும் மூன்று உடற்பயிற்சி களை மாணவர்கள் காலை வழிபாட்டின்போது மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் வல யங்களிலுள்ள விளையாட்டுத்துறை பொறுப்பாளர்களுக்கு 

12ஆம் திகதி அறிவித்தல் வழங்கப்படுவதுடன், அவர்களுக்குப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ள து. எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மாகாணத்திலுள்ள தரம் 6 - 13 வரையுள்ள பாடசாலை மாண வர்கள் இரு நாட்கள் இந்த உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் 

என்று மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.