வடமாகாண நீா் பயன்பாடு மற்றும் நீா்ப்பாசன திட்டங்கள் குறித்து ஆளுநா் வகுத்துள்ள திட்டம், புதிய குழப்பங்களை உண்டாக்குமா?

ஆசிரியர் - Editor I
வடமாகாண நீா் பயன்பாடு மற்றும் நீா்ப்பாசன திட்டங்கள் குறித்து ஆளுநா் வகுத்துள்ள திட்டம், புதிய குழப்பங்களை உண்டாக்குமா?

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் காணப்படும் நீர் வளங்களை முகாமைத்துவம் செய்து வட மாகாணத்தில் காணப்படும் நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு பொதுவானதும் உறுதியானது நிரந்தரத் தீர்வொன்றினை காணுவதனை நோக்காகக் கொண்டு 

ஆளுநர் சுரேன் ராகவனின் ஆலோசனையின் பேரில் அமையப் பெற்றுள்ள மாவட்டங்களுக் கிடையிலான நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான அமையத்தின் முதலாவது சந்திப்பு  ஆளுநர்  தலைமையில் நேற்று முந்தினம் (07) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த அமையத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் விவசாயிகளின் பிரதிநிதிகள் ஐவரும் அரச அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் சார்பில் ஐந்து பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளரும் அங்கம் வகிப்பதுடன் அவ்வாறு ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 55 பிரதிநிதிகள் அங்கம் வகிப்பதுடன் இந்த 55 பேரிலிருந்து 5 விவசாயிகள் 

மற்றும் ஐந்து அரச அலுவலர்கள்அடங்கலான மேல்நிலைக்குழு தெரிவு செய்யப்படவுள்ளதுடன் அமையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்கள் யோசனைகள் மேல்நிலைக் குழுவில் விவாதிக்கப்பட்டு வடமாகாண நீர் தொடர்பான இறுதிப் பிரகடனம் தயாரிக்கப்படவுள்ளது.

இந்த அமையதிற்கு வட மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களின் நிபுணர்களும் வெளிநாடுகளில் பணிபுரியும் இதனுடன் தொடர்புபட்ட நிபுணர்களும் தன்னார்வ ரீதியில் தமது ஆலோசனைகளை முன்வைக்க முடியும்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு