சாியான தலமைத்துவம் மற்றும் மக்கள் பங்களிப்பு இல்லாமல் வடமாகாண அபிவிருத்தி சாத்தியமற்றது..

ஆசிரியர் - Editor I
சாியான தலமைத்துவம் மற்றும் மக்கள் பங்களிப்பு இல்லாமல் வடமாகாண அபிவிருத்தி சாத்தியமற்றது..

வடக்கில் சரியான தலைமைத்துவம் மற்றும் மக்களின் பங்களிப்பு இல்லாது விட்டால் அபிவிருத் தி வெற்றியடையாது என தெரிவித்த ஆய்வாளர் அகிலன் கதிர்கமர், வடக்கு மாகாணத்தின் அபி விருத்திக்கான ஆராட்சி மற்றும் கொள்கை வகுப்பதற்கான நிலையம் அவசியம் எனவும் தெரிவி த்துள்ளார்.

வடமாகாண முதன்மை திட்டத்திற்கான பொருளாதார விருத்திக் கட்டமைப்பு அறிக்கை இலங் கை மத்திய வங்கியின் வட பிராந்தியக் காரியாலயத்தினால் நேன்று யாழ் பொது நூலக கேட் போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. ஆதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து உரையாற்றுகையில்

வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்து பார்க்கும் போது அது தோல்வி என்றே கூறலாம். யுத் தம் முடிந்த 10 வருடம் ஆகியும் தொடர்ந்தும் ஒரு நெருக்கடி நிலையில் தான் உள்ளது . அதற்கு கா ரணம் யுத்தத்திற்கு பின் வடக்கில் எடுக்கப்பட்ட மீள் கட்டுமானம் மற்றும்  கொள்கைகள் தான் காரணம் 

போருக்கு பின்னர் பெரியளவில் முதலீடு வந்திருந்தாலும் அவை  உட்கட்டுமானங்களில் உள்ளிட ப்பட்டுள்ளன. வங்கி ம்றும நிதிநிறுவனங்களில் நிதியின் பரவலாக்கம் அதிகரித்துள்ளது, அதற் கும் மேலாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை வெறுமனே சு யதொழில் மூலம்  கட்டியெழுப்பலாம் 

என்ற கொள்கையும் இந்த தோல்விக்கு காரணமாக இருக்கலாம். வடக்கு மாகாணத்தில் சிறு  விவசாயிகள் , சிறு கடற்தொழிலாளர்கள், சிறு உற்ப்பத்தியாளர்களின் பொருளாதாரமாக இருந்தாலும் அவர்களுக்கு பொருத்தமான  முதலீடுகள் முன்னெடுக்கப்படவில்லை. மேலும் இங்குள்ள மக்களின் திறமைகளை  

அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கும் அபிவிருத்தி நடைபெறவில்லை. அடுத்து 30 வருடகா ல யுத்தம், ஏனெனில் ஏனைய நாடுகளில் இடம்பெற்ற யுத்தம் சுமார் 6 வருடங்களில் முடிந்ததாக இருக்கிறது. ஆனால் வடக்கில் 30 வருடகால யுத்தம் என பார்க்கும் போது அது சமூக மட்டத்தில் பலவிமான தாக்கத்தை கொண்டுவரும். 

சமூக மட்டத்தில் ஒரு ஸ்திரத்தை உருவாக்காமல்  அபிவிருத்தி சாத்தியப்படாத விடயம் ஆகும். அ பி விருத்தி என்பது அது முழுமையான பார்வையுடன் கொள்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. ஒ வ்வொரு திட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்டகால பார்வையில் தான் இந்த நெருக்கடி யை தீர்க்க முடியும்.

இலங்கையின் தேசிய கொள்கைகள் ஒருபக்கம் இருக்கும் போது அந்த கொள்கைகளால் இங்கு ள்ள விசேட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மா காணத்துக்கு என விசேட தேவை விசேட கொள்கை உள்ளது.மற்றும் வடமாகாணத்தின் வளங்கள், பலம் பலவீனம் கணக்கில் எடுத்து தான் அபிவிருத்தி தொடர்பாக ஆராயலாம்.

எனவே பலவிதமான ஆய்வுகள் தேவைப்படுகிறது அது தொடர்பான  விவாதம் வேண்டும் பலரு டைய கருத்துக்கள் உள்வாங்கி தான் அபிவிருத்தியை  முன்னெடுக்க  முடியும். அபிவிருத்திக்கு அடிப்படையாக மூலதனம், ஊழியம்,  காணி போன்ற வளங்கள் அடிப்படையானது. மூலதனம் நீண்டகால முதலீடு இருக்கவேண்டும் 

ஆனால் வடக்கில் முதலீடு இருந்தாலும் நடைமுறை மூலதனம் இல்லாத காரணத்தால் உற்பத்தி குறைவாகவுள்ளது. ஊழியத்தை பார்த்தால், மேற்கு நாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகம், ஆனால் வடக்கில் அவை குறைவு விசேட திட்டங்கள் ஊடாக அவர்களின் பங்களிப்பை பெற வேண்டும்.

வடக்கில் பலவிதமான வளங்கள் உண்டு காணி, கடல், நீர், என உண்டு இவற்றை எவ்வாறு நிலை யான முறையில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஆராயவேண்டும். மேலும் அபிவிருத்திக்கா ன சூழல் இருக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம்என்ற வகையில் அபிவிருத்திக்கா ன சமூக அத்திவாரத்தை பலப்படுத்தவேண்டிய தேவை உள்ளது.

மக்களை பலப்படுத்திய பின்னர் தான் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும். கைத்தொழில் பொருளாதார அபிவிருத்திக்கு மிக முக்கியம் வடக்கில் விவசாயம் சார்ந்த கைத்தொழிலுக்கு முக்கியத்துவம கொடுக்க வேண்டும். மேலும் சரியான தலைமைத்துவம் இல்லாது விட்டாலும் மக்களின் பங்களிப்பபு இல்லாவிட்டாலும் அபிவிருதி வெற்றியடையாது 

குறிப்பாக வடக்கில் திட்டமிடல் அமைப்பு தேவையாக உள்ளது. ஆதாவது வடக்கில் ஒரு ஆராட்சி கொள்கை வகுப்பதற்கான நிலையம் தேவைப்படுகிறது என மேலும் தெரிவித்தார்.


​​

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு