போதை பொருள் கடத்தல்காரா்களை பாதுகாப்பது பொலிஸாா், அவா்களிடம் கடத்தல்காரா்கள் குறித்து முறையிட்டு என்ன பயன்..?
போதை பொருள் கடத்தல் தொடா்பில் தகவல் வழங்குவதால் மட்டும் கடத்தலை கட்டுப்படுத்த இ யலாது. காரணம் தகவல் வழங்குபவா்கள் தாக்கப்படுகிறாா்கள், பொலிஸாரோ தாக்குதல் நடத்தி யவா்களுக்கு சாா்பாகவே பொலிஸாா் வழக்குகளை தாக்கல் செய்கின்றாா்கள்.
பாதிக்கப்பட்டவா்களை பாதுகாப்பதற்கு பொலிஸாா் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆக மொத்தத் தில் பொலிஸாருக்கு தகவல் கொடுப்பதால் பயன் எதுவும் இல்லை. என யாழ்.மாநகரசபை உறுப் பினா் ந.லோக தயாளன் கூறியிருக்கின்றாா்.
இன்று நடைபெற்ற யாழ்.மாநகரசபை அமா்விலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன் போது மேலும் அவா் கூறுகையில், இன்று வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணமே கஞ்சா விநியோ க மார்க்கமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
இதனைத் தடுக்க வேண்டிய பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறுகின்றனர். ஆ னால் தடுக்க தகவல்களைத் தாருங்கள் எனவும் கோரப்படுகின்றது. ஆனால் ஒரு பள்ளிச் சிறுவன் கஞ்சா விற்பனை தொடர்பில் தகவல் வழங்கியமையினால்
கஞ்சா கடத்தல்கார்களினால் தாக்கப்பட்டார். ஆனால் அந்தச் சம்பவத்தினை பொலிசார் திசை திருப்பியுள்ளதோடு சிறுவனின் பெற்றோரிடம் சிங்களத்தில் எழுதிய அறிக்கையில் ஒப்பம் பெற் றதாக பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
இதேநேரம் கஞ்சா கடத்தலையும் விற்பனைகளையும் தடுப்பதற்காக மேலும் விசேட அதிரடிப் படையினரை அதிகரிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை முன் வைப்பது தொடர்பில் இங்கே ஆ லோசணை கோரப்படுகின்றது அதுவும் மக்களிற்கு
இடையூறான செயல்பாடாகவே அமையும் உண்மையில் இந்த போதைப்பொருட்கள் கடல் மார் க்கமாக அதுவும் வெறும் 20 குதிரை வலுக்கொண்ட படகுகள் மூலம் கடத்தி வரப்படுகின்றன. அ தனால் மக்களிற்கு இடையூறு விளைவிக்காத செயல்மூலமே
கட்டுப்படுத்தும் வழிமுறை உண்டு. அதாவது கடலிலே நிற்கும் கடற்படையினரை வேண்டுமா னால் கடலில் அதிகரித்து கடலில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு கோருங்கள் அவ்வாறு க டற்படையினர் கடலில் தமது பணியை திறம்படச் செய்தால்
ஊருக்குள் கொண்டு வரப்படும் போதைப்பொருட்கள் கட்டுப்பட்டே தீரும் இங்கே எமது பிரதே சத்திற்குள் போதைப் பொருளினை உலாவ விடுவது வெறுமனே எம்மு இளைஞர்களின் எதிர் காலத்தை அழிப்பது மட்டும் அல்ல திட்டம்.
எமது வாயாலேயே படையினரை தா என கேட்க வைக்கும் சதியும் உள்ளது. இதேநேரம் போதைப் பொருள் கடத்துபவர்களை துணிந்து அடையாளம் காட்ட வேண்டும் என்றால் பள்ளிச் சிறுவன் மட்டுமல்ல ஓர் பிரதேச செயலாளரே மாவட்ட சிவில்பாதுகாப்பு
குழுக்கூட்டத்தில் தெரிவித்தார் . பொலிசாருக்கு தகவல் வழங்கினாலும் நடவடிக்கை இல்லை என. இன்னுமோர் பிரதேச செயலாளர் தெரிவித்தார் போதைப் பொருள் விற்பனை செய்பவர்க ளை பொலிசாருக்கு நன்கு தெரியும் என.
இதனால் குறித்த விடயத்தினை கட்டுப்படுத்த கடல்பகுதியில் கடற்படையினர் தமது பணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றே கோரிக்கை வைக்க வேண்டும். என்றார்