SuperTopAds

10 வருடங்களின் பின் சொந்த காணிகளுக்கு திரும்பும் கிளிநொச்சி மக்கள், 14 குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
10 வருடங்களின் பின் சொந்த காணிகளுக்கு திரும்பும் கிளிநொச்சி மக்கள், 14 குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டது..

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினாின் வசமிருந்த 14 பேருக்கு சொந்தமான காணிகள் உாிமையாளா்களுக்கு இன்று காலை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளை அளுநா் சுரேன் ராகவன் வழங்கியுள்ளாா். 

படையினர் வசமிருந்த 21.24 ஏக்கர் காணிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலை மையில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இதில் படையின் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 21.24 ஏக்கர் காணி அதன் உரிமையாளரிடம் கையளி க்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையல் விடுவிக்கப்பட்ட 39.95 ஏக்கர் காணிகளில் மேற்படி காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள போதும் மேலும் 18.71 ஏகக்கர் காணி இன்னமும் கையளிக்கப்பட வேண்டியது குறிப்பிடத்தக்கது.