14ம், 15ம், 16ம் திகதிகளில் பிரதமா் ரணில் வடக்குக்கு விஜயம், பாலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைக்கிறாா்..
பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி
பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதுடன் தமிழகத்துக்கு உடனடியாக வானூர்திச் சேவைகளை நடத்தும் வகையில் அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி இருநாள் பயணமாக யாழ்ப்பாணம் வரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அடிக்கல்நாட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய 1.95 பில்லியன் ரூபாவில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
கடந்த ஆண்டு (2018) ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையால் தாமதமமைந்தது. இந்நிலையில் மீள அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இதற்காக பிரதமரால் பலாலிவிமான நிலைய அபிவிருத்தி செய்ய புதிய அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
புனரமைப்பு செய்யும் பலாலி விமான நிலையத்தில் 100 பயணிகளை ஏற்றக்கூடிய விமானங்கள் வந்து செல்வதற்கு ஏற்றவகையில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதனை இலங்கை விமானப்படையினர் மூலம் புனரமைப்பு செய்யும் வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.