ரவுடிகள் அட்டகாசம் தாங்க முடியாமல் பொலிஸ் காவலரண் அமைக்க கோாிய கோணாவில் மக்கள், கோாிக்கையை ஏற்றது பொலிஸ்..
கிளிநொச்சி- கோணாவில் பகுதியில் ரவுடி கும்பல் ஒன்றின் அட்டகாசத்தினால் அந்த பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட பொலிஸாா் தீா்மானித்துள் ளனா். பொதுமக்களின் கோாிக்கையினாலேயே இந்த காவலரண் அமைக்கப்படவுள்ளது.
இது குறித்து மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசத்துக்கு உட்டபட்ட கோணாவில் கிராமத்தில் சந்திரமுகி சந்தி உள்ளது. இந்தச் சந்தியில் இளைஞர்கள் உ ள்ளிட்ட சிலர் நின்று பாடசாலை விடுகின்ற நேரத்திலும்
பிரத்தியோக வகுப்புக்குச் சென்று வருகின்ற நேரத்திலும் பெண் பிள்ளைகளுக்குத் தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் தமது பிள்ளைகள் குறித்த வீதியால் பயணிப்பதற்கு பாதுகாப்பு இல்லாத நிலமை ஏற்பட்டுள்ளது என்று பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
சந்தியில் பொலிஸ் காலரண் அமைப்பதன் மூலம் அந்த பகுதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்கு மக்கள் கொண்டு வந்தனர்.
குறித்த பகுதியில் பொலிஸ் காவலரண் அமைப்பது தொடர்பாக உரியவர்களுடன் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் அத்தியட்சகர் சு.ஆ.னு.து ரட்ணாயக்க தெரிவித்துள்ளார்.