SuperTopAds

ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் 2 ஆயிரம் கிலோ நெல்லை கொள்வனவு செய்ய திட்டம், 230 விண்ணப படிவங்கள் பெறப்பட்டது..

ஆசிரியர் - Editor I
ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் 2 ஆயிரம் கிலோ நெல்லை கொள்வனவு செய்ய திட்டம், 230 விண்ணப படிவங்கள் பெறப்பட்டது..

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் பலத்த சிரமங்களை எ திா் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் 2 ஆயிரம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு கிளிநொச்சி மாவட்ட செயலா் சுந்தரம் அருமைநாயகம் கூறியுள்ளாா், கிளி நொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை உரிய விலையில் சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் 

பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் தலா இரண்டாயிரம் கிலோ நெல் மானிய உரக்கொடுப்பன வுக்கான பெயர் பட்டியல்படி விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கபட்டு கொள்வனவு நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடு ஒரு கிலோ 38 ரூபாவுக்கும் சம்பா ஒரு கிலோ 41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகி ன்றது. இதுவரை 230 வரையான விவசாயிகள் விண்ணப்பப்பவடிங்களை பெற்றுள்ளனர்.நேற்   று வரை பத்தாயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது 

என்றும் தெரிவித்துள்ள மேற்படி சபை மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல் களஞ்சிய சாலைக ளும் நெல் கொள்வனவிற்காக திறக்கப்பட்டுள்ளன. கொழும்பில் நடைபெற்ற அமைச்சர் மட்டத் தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விவசாயிகளிடமிருந்து 

கொள்வனவு செய்கின்ற நெல்லை 2,000 கிலோ மட்டுப்படுத்தப்பட்ட அளவை மேலும் அதிகரிக் குமாறு தான் கோரியிருந்ததுடன், விவசாயிகளிடமுள்ள பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் தெரிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.