SuperTopAds

அறுபடை இயந்திரங்களை வழிமறித்து இலஞ்சம் வாங்கும் பொலிஸாா், இனிமேல் நடக்காது என்கிறாா் பிரதி பொலிஸ்மா அதிபா்..

ஆசிரியர் - Editor I
அறுபடை இயந்திரங்களை வழிமறித்து இலஞ்சம் வாங்கும் பொலிஸாா், இனிமேல் நடக்காது என்கிறாா் பிரதி பொலிஸ்மா அதிபா்..

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் அறுபடை இயந்திரங்கள் மற்றும் உழவு இயந்திரங்க ளை வழிமறித்து அசௌகாியங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் மற்றும் இலஞ்சம் கேட்கும் சம்ப வங்கள் இனி நடக்காது என மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபா் மகிந்த குணரட்ண கூறியுள்ளாா்.

நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விவசாய குழு கூட்டத்திலேயே இந்த உத் தரவாதம் பிரதி பொலிஸ்மா அதிபாினால் வழங்கப்பட்டிருக்கின்றது. 

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின் பரந்தன் சந்தி தொடக்கம் புளி யம்பொக்கணை சந்தி வரையான பகுதிகளில் விவசாயிகள் தங்களுடைய நெல்லை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரங்களை கொண்டு செல்லும் போதும், 

அறுவடை செய்கின்ற நெல்லை வீடுகளுக்கு கொண்ட வருகின்ற போதும், வீதிப் போக்குவரத்து ப் பொலிஸார் அவற்றை மறித்து பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், இரகசியமான மு றையில் பணங்களைப் பெற்று வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஆகவே இதனை தொடர்ந்து குறித்த விடயத்தில் பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடா து என கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நெல் அறுவடை இயந்திரங்கள், உழவு இயந்திரங்கள் வீதிகளில் கொண்டு 

செல்ல வேண்டுமென்றும் மேலும் தெரிவித்துள்ளார்.