நிலமீட்பு போராட்டத்தில் சிங்கள இனத்தவர்களும் இணைவு, அரசு தீர்வை வழங்க தவறினால் போராட்டம் எனவும் முழக்கம்..
706 ஆவது நாளில், கேப்பாப்புலவு மக்கள், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது நிலத்தை விடுவிக்க கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் .
இன்றைய நாள் இலங்கயைினுடைய 71ஆவது சுதந்திர நாள் பரவலாக பல இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது. முல்லைத்தீவு –கேப்பாப்புலவு மக்கள்
தமது நிலமீட்பினைக் கோரி தமது தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலை யில், 706ஆவது நாளான இன்று சுதந்திர நாளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து
பாரிய அமைதிவழியிலான போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதுடன்,
எதிர்ப்புப் பதாதைகளும் போராட்ட இடத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அதேவே ளை போராட்டக் காரர்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டும் வகையில்
கறுப்புப்பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . இப்போராட்டத்தில் காலையில் கேப்பாபுலவு மக்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள்,
உலகத்தமிழ் மாணவர் ஒன்றியமும் இணைந்த அமைப்புக்களும், ஏனைய சிவில் சமூக அமைப்புக்கள்
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான, து.ரவிகரன்,ஆ.புவனேஸ்வரன், க.சிவநேசன், மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள்
உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு இந்த போராட்டத்தை நிகழ்த்தினர்
தொடர்ந்து மாலையில் தென்பகுதியின் பல மாவட்டங்களையும் சேர்ந்த சம உரி மை இயக்கத்தின் அங்கத்தவர்களான சிங்கள
தமிழ் முஸ்லிம் உறவுகள் இவர்களோடு இணைந்துகொண்டு பாரிய போராட்டம் ஒன்றை நிகழ்த்தினர் இராணுவத்துக்கும்
அரசாங்கத்துக்கும் எதிரான பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மக்களுடைய போராட்டத்துக்கு ஆதரவாக உரிமைக்குரல் எழுப்பினர்
இங்கு கருத்து தெரிவித்த இவர்கள் அரசுக்கு சவால் விடுப்பதாகவும் இந்த மக்களுக்கு நியாயமான தீர்வு விரைவில் வழங்கப்படாவிட்டால்
அனைத்து தரப்புக்களையும் இணைத்து பாரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தனர்.