வறுமையிலிருந்து விடுபட்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் மாறவேண்டும்..
வறுமையினை மாவட்டத்தில் இருந்து ஒழிக்கவேண்டுமாக இருந்தால் அனைவரும் ஒருங்கிணை ந்து செயற்படுவது அவசியம் என் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கே தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்
இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் 71 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னியர்களின் கைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்த நாளினை ஆண்டுதோறும் நாட்டின் சுதந்திரதினமாக கொண்டாடுவது வளக்கம். இலங் கையின் ஏனைய மக்களுடன் இணைந்து முல்லைத்தீவு மாவட்டமும்
சுதந்திர தினத்தினை கொண்டாடுவதில் மகிழ்வடைகின்றோம். போர்த்துக்கேயர், ஒல்லாந்த ர், மற்றும் ஆங்கிலேயர் கைக்கு அகப்பட்டிருந்த எமது நாடான அழகிய இலங்கை 1948 ஆம் ஆண்டு பொப்ரவரி 04 ஆம் நாள் ஆங்கிலேயர்களின் கைகளில்
இருந்து மக்களின் கைகளில் வழங்கப்பட்ட நாளாக இருக்கின்றது எங்கள் சுதந்திரம் அன்னியர்க ளிடம் இருந்து பெற்றுக்கொண்டோம் என்பதை குறித்து ஆண்டு தோறும் பெப்ரவரி மாதம் 4ஆம் நாள் மகிழ்ச்சியடைய வேண்டியவர்களாகவும் நாட்டினை
முன்னேற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து செயற்பாடுகளை முன்னெடுக்க இந்த நாளில் பிரகடனம் போட ஆயத்தமாக இருக்கவேண்டும்.
இன,மத வேறுபாடுகள் இன்றி தரப்பட்ட கடமைகளை உணர்ந்து மாவட்டத்தின் அபிவிருத்தியி னை முன்னெடுப்பதில் அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமாகின்றது. எமது மாவட்டம் மீள்குடியேற்றப்பட்ட மாவட்டம் பத்து ஆண்டுகள் கடந்து நிக்கின்றோம்
வறுமையில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது அந்த வறுமையினை மாவட்டத்தில் இருந்து ஒழிக்கவேண்டுமாக இருந்தால் அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு மாவட்டத்தினை பொ ருளா தாரரீதியாக முன்னேற்றம் காண்கின்ற
மாவட்டமாக எடுத்து செல்லவேண்டியது அனைவரின் பொறுப்பாக இருக்கின்றது. இங்கு வந்திரு க்கின்ற எதிர்கால சிப்பிகளான பாடசாலை மாணவர்களிடத்தில் நாங்கள் கேட்டுக்கொள்வது இந்த மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதில் உங்களின்
பங்களிப்பு மிகவும் அவசியமாக இருக்கின்றது சிறுவர்களாக இருக்கும் போதே நாட்டின் அபிவி ருத்தி தொடர்பில் சிந்திக்கவேண்டியவர்களாகவும் நாட்டின் சுத்திரத்தில் உங்களுக்கும் பங்களி ப்பு இருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்படுபவர்களாகவும்
நீங்கள் விளங்கவேண்டும் எங்களை சுத்தி இருக்கின்றவர்களை மற்றவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களை அன்பு செய்து இணைந்து புரிந்துணர்வுடன் செயற்படுபவர்களாக ஒவ்வொ ருவரும் திகள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.