வீதியின் ஒருபக்கத்தில் சிங்க கொடி, மறுப்பக்கத்தில் கறுப்பு கொடி, அடங்க மறுக்கும் கேப்பாபலவு மக்களின் நிலமீட்பு குரல்..
இலங்கயைின் 71ஆவது சுதந்திர நாள் பரவலாக பல இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது. முல்லைத்தீவு - கேப்பாப்புல மக்கள் தமது நிலமீட்பினைக் கோரிதமது தொடர் போராட்டத்தி னை முன்னெடுத்துவரும் நிலையில்,
71 ஆவது நாளான இன்று சுதந்திர நாளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய அமைதி வழியிலான போராட்டம் ஒன்றினைச் செய்து வருகின்றனர். கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்ப துடன், எதிர்ப்புப் பதாதைகளும் போராட்ட இடத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
அதேவேளை போராட்டக் காரர்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டும் வகையில் கறுப்புப்ப ட்டி அணிந்து போராட்டத்தினை மேற்கொள்வதுடன், பல எதிர்ப்புப் பதாதைகளைத் தாங்கிய வாறு, இராணுவத்தினை தமது காணியிலிருந்து வெளியேறுமாறும்,
தமது நிலம் தமக்கு வேண்டுமெனவும், தமக்கு சுதந்திர தினம் இல்லை எனவும் கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தினை மேற்கொள்கின்றனர்.இப்போராட்டத்தில் கலந்துகொள்வ தற்காக வெளியிடங்களில் இருந்து பலரும் திரளாக வருகைதந்துள்ளதுடன்,
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான, து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், க.சிடநேசன், மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளமை குறி ப்பிடத்தக்கது.