SuperTopAds

சுதந்திர தினம் தமிழா்களுக்கு காி நாள், அரசை நோக்கில் சரமாாி கேள்விகளுடன் வீதியில் இறங்கிய மக்கள்..

ஆசிரியர் - Editor I
சுதந்திர தினம் தமிழா்களுக்கு காி நாள், அரசை நோக்கில் சரமாாி கேள்விகளுடன் வீதியில் இறங்கிய மக்கள்..

இன்று இலங்கயின் சுதந்திரதினத்தை கரி நாளாக அறிவித்து வடக்கு மக்கள் கிளிநொச்சி முரு கன் ஆலய முன்றலில் ஒன்று கூடி பாரிய ஆர்பாபட்டம் ஒன்றினை முன்னெடுத்திருக்கின்றனா். 

சிறிலங்கா சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் இராணுவமே வெளியேறு எங்கள் நிலம் எமக்கு வேண்டும் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும்.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு வடகிழக்கு எமது தாயகம் எங்கள் மக்களை எமது நிலத்தில் வாழ விடு சரணடைந்தவர்கள் எங்கே? நாட்டின் சுதந்திரம் என்பது 

சிங்களவர்களுக்கு மட்டுமா? இன அழிப்பிற்க்கு சர்வதேச விசாரணை வேண்டும் தமிழ் தேசத்தையும் அதன் தனித்துவமான இறமையையும் அங்கீகரி காணாமல் 

ஆக்கப்பட்டவர்களுக்கு அரசே பதில் கூறு கேப்பாப்புலவு காணிகளை உடனடியாக விடுதலை செய் தென்னமரவாடியை ஆக்கிரமிக்காதே வெடுக்கு நாறி மலையை விட்டு வெளியேறு 

மன்னார் புதை குழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும் கொலையாளியை நீதிபதியாக்கும் 30/1 தீர்மானத்திற்கு மேலும் கால அவகாசம் கொடுத்து நீதியை இழுத்தடிக்காதே ஐ.நா 

பாதுகாப்பு சபைக்கு பாரப்படுத்து வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரமே தமிழருக்கு வேண்டும் முள்ளி வாய்க்காலிலும் ஓமந்தையிலும் ஒப்படைத்த எம் உறவுகள் எங்கே என 

பல்வேறு கோசங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்து இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் வடக்கு மிதல்வர் சீ.வி.

விக்கினேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எம்.கே.சிவாஜிலிங்கம் கிராமிய உழைப்பாளர் சங்கம் பல்கலை கழக மாணவர்கள் பொது மக்கள் என ஆயிரத்திற்க்கு 

மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.