காட்டு யானைகளின் அட்டகாசம், உறக்கத்தை தொலைத்து காவல் காக்கும் விவசாயிகள்..
கிளிநொச்சி- வன்னோிக்கும் கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டிரு க்கும் நிலையில் பெரும்போக அறுபடையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் பெரும் அசௌகாிய ங்களை எதிா்கொண்டிருக்கின்றனா்.
அறுவடை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் யானைகள் வயல் நிலங்களுக்குள் புகுந் து கொள்வதன் காரணமாக நெற்பயிர்களுக்கான காவல்களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளன ர். வன்னேரிக்குளத்தின் மண்ணியாகுளம் பகுதியில்
மானாவாரி நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் வன்னேரிக்குளத்தின் மேற்கொ ள்ளப்பட்டுள்ள நீர்ப்பாசன நெற்செய்கைக்குள்ளும் யானைகள் வருவதன் காரணமாக விவ சாயிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
யானைகளின் நெருக்கடி தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள ன. அத்துடன், வனஜீவராசிகள் திணைக்களத்திடம் யானைகள் தொடர்பாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் வன்னேரிக்குளம் கிராமத்திற்குச்
சென்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானைவெடிகள் கூட வழங்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.