சுன்னாகம் பகுதியில் கைப்பற்றப்பட்ட 7 ஆயிரம் லீற்றா் எதனோல் கிளிநொச்சியில் அழிக்கப்பட்டது, பெறுமதி இரண்டரை கோடியாம்..
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சுமார் ஏழாயிரம் லிட்டர் எதனோ ல் அடங்கிய சுமார் 331 கொள்கலன்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்ட ளைக்கு அமைவாக ஊற்றி அளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கடந்த 24ம் திகதி விசேட அதிரடி படையினர் மேற் கொண்ட பரிசோதனையின் பொழுது சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்காக பயன் படுத்தவிருந்த 7 ஆரயிரம் லீற்றர் எதனோல் அடங்கிய சுமார் 330 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டது.
இவற்றின் பெறுமதி இரண்டரைக் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இக்குற்றச் செயலுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவலைப்பின் பொழுதே குறித்த சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரையும் அதிரடி படையினர் அண்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி த. நந்தகுமார், மற்றும் நிலைய பரிசோதகர் த . நளிதரன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்
நீதிபதி மா. கனேசராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப் பட்டதையடுத்து குறித்த இருவரையும் 31ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்
சுமார் ஏழாயிரம் லிட்டர் எதனோல் அடங்கிய சுமார் 331 கொள்கலன்கள் இன்று (30-01-2019) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நீதி மண்றப் பதிவாளர் மற்றும் அதிரடிப் படையினர் பொலிசார் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் உமையாள் புரம் பகுதியில் ஊற்றி அளிக்கப்பட்டுள்ளன.